பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. கைந்நிலை - · 23.

பரத்தையிடம் சென்ற தலைவனைப் பற்றி, "நல்லவன் அவன்; அவனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று, பாட்டுப் பாடும் பாணன் தலைவியிடம் தூதாக வந்து சொல்லுகிறான். பாணன் தலைவனுக்கு உடந்கையாக இருப்பவன். அவனைக் கண்டு தலைவிக்குக் கோபம் வருகிறது.

"ஏ பாணனே! நீ யாரிடம் வந்து காது குத்துகிறாய்? வெள்ளம் பாயும் ஊரையுடைய தலைவனது நிலைமை யையும் இயல்பையும் யாருக்குச் சொல்கிறாய்? நீ சொல் வதைக் கேட்டு நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்? உனக்கு அவன் நல்லவனாகவே இருக் கட்டும். நீ அவனால் ஏதாவது காரியம் ஆக வேண்டு மானால் சாதித்துக் கொள். நீகூத்தாட்டுபவனாக இருந்து அவனை ஆட்டி வை; அதனால் கிடைக்கிறதைக் கொண்டு. சாப்பிட்டுப் பிழை என்கிறாள். . -

த்ேதநீர் ஊரன் நிலைமையும் வண்ணமும்

யார்க்குஉரைத்தி பாண: அதனால் யாம் என்செய்தும்: கூத்தனாக் கொண்டு குறைநீ உடையையேல் . ஆடடுவித்து உண்ணினும் உண்.’’ ; : -

வெள்ளமாக நீர் பாயும் ஊரையுடைய தலைவன் இப்போதுள்ள நிலைமையையும், அவனுடைய இயல்பை யும் யாருக்குச் சொல்லுகிறாய், பாணனே? அதைக் கேட்டு அதனால் நாங்கள் என்ன செய்வோம்? அவனைக் கூத்தாடுபவனாகக் கொண்டு, நீ ஏதாவது காரியம் உடையையானால் அவனைத் கூத்தாடச் செய்து அதனால் பிழைத்துச் சாப்பிடு என்பது இதன் பொருள். நீத்த என்பதற்கு என்னைப் பிரிந்து சென்ற என்றும் பொருள். கொள்ளலாம். .