பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 தமிழ் நூல் அறிமுகம்

இந்நூலின் கடைசிப் பாட்டு மங்கலமாக முடிகிறது. பிரிந்து சென்ற தன்லவன் வந்து விட்டதைத் தோழி தலைவிக்குச் சொல்கிறாள். -

"அவனுடைய பிரிவால் உன் உடம்பில் உண்டான பசலை போய் விட்டது. இதோ அவனுடைய தேர் வந்து விட்டது. பாண்டியனுடைய கொற்கைக் கடற்கரை வழியாக வருகிறது தேர். அங்கே உள்ள பறவைகள் பறந்து ஒடும்படி தேர் வந்து விட்டது. அரசர்களைப் போரில் வென்று வெற்றி மாலை அணிந்து உன்னோடு சேர்வதற்காக வந்து விட்டான் காதலன்' என்று அவள் சொல்கிறாள்.

'பொன்அம் பசலையும் தீர்ந்தது, பூங்கொடி

தென்னவன் கொற்கைக் குருகுஇரிய மன்னரை ஒடு புறம் கண்ட ஒண்தாரான் தேர்இதோ கூடல் அணைய வரவு."

(பொன் அம் பசலை-பொன்னைப் போன்ற நிறம் பெற்ற பசலை; இது தலைவர்களைப் பிரிந்த மகளிருக்கு அந்தப் பிரிவுத் துன்பத்தினால் உடம்பில் உண்டாகும் நிறம். தென்னவன்-பாண்டியன் குருகு இரிய-பறவைகள். பறந்து ஓடிப்போக. ஒடு புறம் கண்ட-ஒடும் போது காட்டும் புறத்தைக் கணட. கூடல் அணைய வரவுஉன்னோடு சேர்தலைப் பொருந்த வரும் வருகை. தேர் வரவு இதோ என்று முடிக்க வேண்டும்.)

இந்தத் தலைவன் போர்க்களத்தில் மன்னனுக்குத் துணையாகச் சென்று வெற்றி பெற்று வருகிறவன்.

இவர் கொற்கைப் பக்கத்தில் வாழ்ந்தவராதலின் கொற்கையையும், பாண்டி நாட்டவராதலின் பாண்டி யனையும் பாட்டில் இணைத்துப் பாடினார்.

கிளியைத் திணைப்புனத்திலிருந்து மகளிர் ஓட்ட ஒரு பக்கம் மான் வந்து துள்ளுகிறது. குரங்குகள் பலா,