பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. கைந்நிலை 275

பழத்தை உண்ணுகின்றன. பிற கனிகளைச் சுவைக் கின்றன. தினையின் கதிரில் தேன் ஒழுகுகிறது. அதைப் பெண் யானை உண்ண வருகிறது. மலைச்சாரற் சோலை களில் காட்டுப்பசுக்களும் மந்திகளும்,துள்ளி ஒடுகின்றன. குரங்கு வாழைப் பழத்தைப் பறித்து வாயில் அடக்கிக் கொண்டு ஓடுகிறது. காந்தள் மலரைப் பாம்பு என்று யானை அஞ்சுகிறது. காட்டுப்பன்றி தோண்டிய புழுதியில் மயில் குடைகிறது-இவை இவர் காட்டும் குறிஞ்சி நிலக்

காட்சிகளில் சில. -

பாலை நிலக்காட்சிகள் வருமாறு:

கற்களைச் சூழ்ந்த இலைக்குவியலின் பக்கத்தில் வேடர்கள் சீழ்க்கை ஒலி செய்கிறார்கள். வேங்கை யானையைக் கொல்லுகிறது. யா ைன க ள் நிலை கொள்ளாமல் ஓடுகின்றன. காட்டுப்பசு முழங்குகிறது. ஒமையின் செறிவில்லாத நிழலில் க்ளிறு உறங்குகிறது. ஆந்தை குரல் எழுப்புகிறது. கதிரவன் வெங்கதிரை வீசுகிறான். ஆறலை கள்வர் திரிகின்றனர். அவர்கள் தம் கையில் வில்லும் அம்பும் ஏந்திய யமனைப் போல ஒடுகின்றனர் காணலை நீர் என்று எண்ணி மான்கள் ஒடுகின்றன.

இவர் காட்டும் முல்லையில் முல்லைக்கொடி பல்லைப் போல அரும்புகளை விடுகின்றது. குருந்த மரம் அரும்பு கிறது. கார் காலத்தில் முல்லை நிலம் வளம் பெறுகிறது. செங்காந்தளில் இரத்த நிறமுடைய மலர் தோன்று கிறது. மான்கள் தம் பிணைகளைத் தழுவுகின்றன. மேகம் முழங்குகிறது. கோவலர் கொன்றைக் குழல் ஊது கின்றனர். பிடவமும் குருந்த மரமும் அசோக மரமும் மலர்கின்றன. மயில்கள் கூவுகின்றன. மந்திகள் கைகட்டிக் குந்தியிருக்கின்றன. - * ... . -