பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தமிழ் நூல் அறிமுகம்

கழனியில் உள்ள உழவர்கள் செய்யும் ஆரவாரத்தைக் கேட்டு எருமை ஒடிக் குளத்தில் பாயும் மருத நிலத்தில் நீர் நிலைகளில் கயலினமும் வராலும் பாய்வதைப் பார்க். கிறோம். வயல்களில் தாரா (வாத்து)ப் பறவைகள் மேய்கின்றன. தாமரைப் போதுபொய்கையில் மலர்கிறது. வயல்கள் வளம் பெற்றிருக்கின்றன. நீர் நாய்கள் பாய்ந்து ஒடுகின்றன. ஆம்பல், தாமரை, செங்கழுநீர் மலர்கள் வயல்களில் மலர்கின்றன. மாமரங்கள் வளர்கின்றன.

கடலும் அதைச் சார்ந்ததுமாகிய நெய்தல் நிலத்தில், கடலில் நாவாய் ஒடுகிறது. இறாமீனைக் குவிதது வைத்திருக்கிறார்கள். பனை மரத்தில் அன்றிற் பறவை வாழ்கிறது. அது தன் இணையைக் கூவி அழைக்கிறது. நாரை கடற்கரைச் சோலையில் மேய்கிறது. நெய்தல் மலர் கழியில் பூத்திருக்கிறது. புன்னை மரங்கள் வளர்ந்: திருக்கின்றன. நண்டுகள் மணல் மேட்டில் உலவுகின்றன. அடும்பங் கொடி அந்த மேட்டில் படர்கிறது. இறாமீனை யும் பிற மீன்களையும் உலர்த்துகிறார்கள். கொக்குகள் பறக்கின்றன. கடலில் நுரையோடு அலை மோதுகிறது. தாழம்பூ, கொக்கைப் போலத் தோற்றம் அளிக்கிறது.

இவ்வாறு ஐந்து திணை யிலும் உள்ள இயற்கைக் காட்சிகளையும் குழ்நிலையையும் அமைத்துக் காதல் நாடகத்தின் ஐந்து வேறு ஒழுக்க நிலைகளாகிய புணர்தல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்பவற்றை அழகிய பாடல்களில் எடுத்துக் காட்டுவது இந்தக் கைந்நிலை. என்னும் அகத்துறை நூல். -

女★女