பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ் நூல் அறிமுகம்

தன்மையாகிய கருணை, என்றும் மாறா இளமை, எங்கும் காணாப் பேரழகு என்பவற்றை நக்கீரர் குறிப்பிடு கிறார். மணங்கமழ் என்பது ஞான மணத்தையும், தெய் வத்து என்பது தெய்வப் பண்பாகிய அருளையும். இள என்பது இளமையையும், நலம் என்பது அழகையும் குறிக்கும். - -

இவ்வாறு எழுந்தருளி வரும் முருகன், எங்கும் தானே யாய்ப் பேதமின்றி அத்து விதமாகத் தோன்றும் சிவன் முக்தியாகிய பரிசைத் தருவான் என்கிறார் நக்கீரர். -

அப்படித் தருபவன் பழமுதிர் சோலை மலைக்கு உரியவனாகிய முருகன் என்று முடிக்கிறார். அங்கே மலை மேலிருந்து அருவி வரும் அழகைப் புலப்படுத்துகிறார். மேலிருந்து அடிவாரம் வரையில் உள்ள பல்வேறு மரங் களையும் விலங்கினங்களையும் படிப்படியாகச் சொல் கிறார். அந்த அருவியோடு இறங்கி மலையின் வளம் முழுவதையும் ஒருவாறு பார்த்துவிடலாம்.

இவ்வாறு அமைந்த திரு முருகாற்றுப்படையில் முருகன் பல்வேறு வகை மக்களால் வெவ்வேறு வகையில் வழிபடப் பெறும் கடவுளாக இருப்பதைக் காண்கிறோம். சிவபெருமான் முதலிய கடவுளரும், தேவரும், தேவ மகளிரும் அவன் அருள் பெற வேண்டி வருகிறார்கள். மறை பயில் அந்தணாளரும் வழிபடுகிறார்கள். நாட் டிலும் காட்டிலும் நகரிலும் சிற்றுாரிலும் விழா எடுக் கிறார்கள், பூசாரியும் குற மகளும் போற்றுகிறார்கள். பேயும் அவனது வீரத்தைப் பாராட்டி மகிழ்கிறது.

பல வண்ணமும் வடிவமும் உள்ள மணிகளிடையே ஒரு சரடு புகுந்து கோத்து நிற்பது போல இத்தனை