பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொருங்ர் ஆற்றுப்படை

பாலைநிலம். ஒரு பொருநன், அவனுடைய மனைவி யாகிய விறலி, அவர்களின் சுற்றத்தினர் ஆகியவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். விறலி தன் கையில் ஒரு யாழைத் தாங்கியிருக்கிறாள். பட்டினிப் பட்டாள மாகிய அவர்கள் தங்கள் கலையைச் சுவைக்கும் வள்ளல் எங்கே இருக்கிறான் என்று தேடிச் செல்கிறார்கள். பாலை நிலத்தில் எங்கே பார்த்தாலும் வறட்சி. நிழலே இல்லாத வெறும் பரப்பு. கல்லும் கரடும் நிரம்பிய பாதை. х

அப்போது திடீரென்று சில வழிப்பறிக்காரர்கள் அங்கே வருகிறார்கள். இந்தப் பட்டினிப் பட்டாளத்தைச் சூழ்ந்து கொள்கிறார்கள். மடியில் இருப்பதைக் கீழே வையுங்கள்' என்று தம் கையிலுள்ள வேல், ஈட்டி முதலிய ஆயுதங்களைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.

அவர்களிடம் என்ன இருக்கிறது? பாவம்! எங் களிடம் ஒன்றும் இல்லையே! எங்கள் கந்தைத் துணியைக் கண்டாலே எங்கள் நிலை உங்களுக்குத் தெரிய வில்லையா?” என்று அழாத குறையாகக் கூட்டத்தின் தலைவன் சொல்கிறான்.

கள் வர்கள் விறலியைப் பார்க்கிறார்கள். அவள் கையில் உள்ள யாழின் மேல் அவர்கள் கண்கள் செல் கினறன. என்ன அது?' என்று ஒருவன் கேட்கிறான்.