பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் நூல் அறிமுகம்

காய்க்கறி, கறிவேப்பிலையும் மாங்சாய்த் துண்டும் போட்டுச் சமைத்த புளிக் குழம்பு இவை அங்கே கிடைக் கும். இப்படி உள்ள அந்தணர் வாழ்கின்ற நீர்ப்பெயறு என்ற ஊரைக் கடந்துபோக வேண்டும்.

பிறகு கடற்கரைப் பட்டினத்துக்குப் போகலாம். அங்கே கலங்கரை விளக்கம் இருக்கும்.

உழவர்கள் வீட்டுக்குப் போனால் அங்கே தென்னை ஒலையினால் வேய்ந்த வீடுகள் இருக்கும். மஞ்சட் பயிர் வளர்ந்திருக்கும். அங்கே இனிய பலாப்பழம். இளநீர், யானைத் தந்தத்தைப் போன்று நீண்டு வளைந்த வாழைப் பழம், பன்ன நுங்கு ஆகியவை கிடைக்கும். ஒரே தித்திப் பாக இருக்கும் இவை தெவிட்டிப்போனால், நல்ல சேப்பங் கிழங்குப் பொரியல் கிடைக்கும்.

அப்பால் காஞ்சி மரங்கள் அடர்ந்த காஞ்சிக்குப் போவிர்கள். அங்கே ஆதிசேஷ சயனத்தில் யதோக்த காரியாகிய திருமால் கோயில் இருக்கிறது. அவரை வாழ்த்திவிட்டுச் செல்லுங்கள். . .

காஞ்சிமாநகரில் வீதிகளில் தேர்கள் சென்ற சுவடுகள் இருக்கும். பலவகைக் குடிகள் பலகாலமாக நிலைபெற்று வாழும் இடம் அது. பண்டங்களை வாங்கு வாரும் விற்பாருமாகப் பெருங் கூட்டமாக அங்கே இருக்கும். நகரத்தின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கும். - >

அந்த ஊர்த் தெருக்கள் வட்ட வட்டமாக ஒன்றைச் சுற்றி ஒன்று இருக்கும், அதைப் பார்த்தால் தாமரை மலரின் இதழ் வரிசைகளைப் போல இருக்கும். திருமாலி னுடைய திருவுந்தியில் தோன்றிய தாமரைபோன்று தோற்றம் அளிக்கும். பூவாது காய்க்கும் மரங்களுக்குள் பலாமரம் எப்படிச் சிறந்து வளங்குகிறதோ அதுபோல