பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பெரும்பாணாற்றுப்படை 3 9

நகரங்களுக்குள்ளே சிறந்து விளங்கும் நகரம் அது. மிகப் பழைய நகரம். எப்போதும் விழா நடக்கும் ஊர். அந்த நகரத்தில்தான் பகைவர்களை வென்றவனும் ஈகையிற் சிறந்தவனும் ஆகிய இளந்திரையன் இருக்கிறான். அவன் முற்றத்தில் அவ்னைக் காண்பதற்குரிய செவ்வியை நோக்கிப் பலர் காத்திருப்பர்.

அவனது அவைக்களம் குறுகி அவனைப் புகழுங்கள்.

உடனே அவன் உங்கள் அழுக்கடைந்த உடையை மாற்றிப் பாலாவிப் போன்ற கலிங்கத்தை உடுக்கத் தருவான். பளபளப்பான பாத்திரங்களைப் பரப்பி அவற்றில் பலவகை உணவுகளை நிரப்பி உடனிருந்து உண்ணச் செய்வான். விருந்து வழங்கிய பிறகு உங்கள் தலையில் பொன்னாலான தாமரையைச் சூட்டுவான். உங்கள் மனைவியருக்குப் பொன்மாலை வழங்குவான். வெள்ளைக் குதிரை நான்கு பூட்டிய தேரைத் தருவான். வேறு பல பொருள்களையும் அளிப்பான். அன்போடு, "ஊர் போய் வாருங்கள்' என்று சொல்லி அனுப்புவான்.

இவ்வளவும் சொல்லிவிட்டு இளந்திரையன் நாட்டி

லுள்ள மலைக் காடுகளைப் பற்றிக் கடைசியில் சொல் கிறான் பாணன். . . .

அங்கே கின்னரப் பறவைகள் சாரலில் முரலும். மயில்கள் மரங்களில் ஆடும். ஆண் குரங்குகள் மரங்களில் பாய்ந்து உதிர்ந்த மலர்களைப் பெண் குரங்குகள் பெருக் கிச்சுத்தமாக்கும். அங்கே மான்கள் அச்சமின்றி உறங்கும். அங்குள்ள முனிவர்கள் வேள்வி செய்வார்கள்.

வழிப்போவாருக்கு Tಹಿಡಿತ போனாலும் உபசாரம் கிடைக்கிறது. தெய்வ உணர்ச்சியும் செல்வச் சிறப்பு

ம் அறநெறியும் மல்கியிருக்கின்றன. - -