பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மதுரைக் காஞ்சி 47°

யையும் அவனுடைய சிறப்பையும் அவன் நாட்டின் வளப்பத்தையும் விரிவாக எடுத்துச் சொல்லிக் குறிப்பாக நிலையாமையைப் புலப்படுத்துகிறார் மா ங் கு டி மருதனார்.

முதலில் 205 அடிகளில் பாண்டியனுடைய விரத்தையும். ஈகையையும் பாராட்டி விட்டு,

'அன்னாய் கின்னொடு முன்னிலை எவனோ?

கொன்ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்! கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!”

என்று வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலத் தாம் சொல்ல வந்ததைச் சொல்கிறார் புலவர்.

"அத்தகைய பெருமையை உடையவனே, ஐந்து பொறிகளாலும் அநுபவிக்கப்படுபனவும், உன் முன்னாலே நிற்பனவுமாகிய இந்தப் போகப் பொருள்களுக்கும் ஆன்மாவாகிய உனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது: பெரிதாக இருக்கும் ஓர் உண்மையான பொருளைச் சொல்கிறேன். போர்த் தொழிலில் பெருமை பெற்ற தலைவனே, உன்னுடைய அறியாமையாகிய, அவலம் கெடுவதாக! நான் சொல்வதை இனிக் கேள்' என்பது அந்த அடிகளின் பொருள். w -

அதற்கு மேல், உனக்கு முன்னால் இந்த உலகை ஆண்டு வீரச் செயலை விளைத்து வீணே மாண்டுபோன் அரசர்கள் கடல் மணலைக் காட்டிலும் பலர் அவரைப் போல நீ இராமல் உயிர் உறுதி பெறுவதற்குரிய காரியங் களைச் செய்ய வேண்டும்' என்று குறிப்பிடுகிறார். .

'பணைகெழு பெருந்திறற் பல்வேல் மன்னர் கரைபொருது இரங்கும் கனை இரு மூங்கீர்த் திரையிடு மணலினும் பலரே, உரைசெல மலர்தலை உலகம் ஆண்டுகழிக் தோரே...'