பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y

கான காதலாக இருந்தாலும் அது புறம்தான். சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் படா' என்று இலக்கண நூல் கூறுகிறது. . . . . . . . - - -

காதல் உள்ளத்தின் துடிப்புகளைத் தமிழ்க்கவிதிை நுட்பமாகச் சொல்கிறது. காதலைக் களவு என்றும் கற்பு என்றும் இரு பிரிவாகப் பிரிப்பர். அடுப்பாரும் கொடுப் பாரும் இன்றிக் கட்டிளங்காளை ஒருவனும் அழகியபெண். ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் விரும்பி ஈடுபட்டு மனம் ஒன்றி. இன்புறுவது களவுக் காதல். திருமணம் செய்து இன்புறுவது கற்புக் காதல். ஒருவனும் ஒருத்தியுமாக மனம் ஒன்றி இணையும் இந்த உறவு ஒரு பிறவியில் அமைவது அன்று; பிறவிதோறும் தொடர்ந்து வருவது. கண்டதும் காதல்’ என்பதனால், இது அப் பொழுதைக்கு உணர்ச்சி வசப்படுவதனால் அமைவது என்று எண்ணக் கூடாது. அது நிலத்தினும் பெரியது: கடலினும் ஆழமானது; வானத்திலும் உயர்ந்தது; தேனினும் இனியது.

இயற்கைச் சூழ்நிலையில் காதலர்கள் ஒன்றுவதும் பிரிவதும் பல்வேறு நிலைகளில் பல பல காட்சிகளாக விரியும். அவர்களுடைய காதல் வாழ்க்கையாகிய நாடகத்துக்கு நிலைக்களமாக நிலமும் காலமும் மரமும் செடியும் மலரும் மணமும் மயிலும் குயிலும் மானும் மரையும் புலியும் சிங்கமும் தோற்றம் அளிக்கும்.அருவியும் ஆறும் சுருதிபோடும். இயற்கையை எவ்வளவு நுட்ப மாகப் பண்டைக் கவிஞர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் கவிதை எடுத்துக் காட்டும். உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை எவ்வாறு கூர்ந்து கவனித்திருக்கிறார்கள் என்பதும் அவற்றால் புலனாகும். புறப்பொருளில் வீரம் தலைசிறந்து நிற்கும். அந்தக் காலத்துப் போர் முறைகளையும் போரிலும் அறம் இருந்த பாங்கையும் புறத்திணை பற்றிய நூல்களில் காணலாம். அரசர்கள், வள்ளல்கள், வீரர்கள், மகளிர் முதலியோரின் இயல்புகளை அவை சொல்கின்றன. புலவர்களைப்