பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. நெடுநல்வாடை 59

இடப்பக்கத்திலே இடுக்கிக் கொள்கிறான். வாளைக்

கையிலே எடுத்து அருகில் வரும் வீரனுடைய தோளிலே

வலக்கையை வைத்துக் கொண்டு வருகிறான். கொற்றக்

குடையை ஒருவன் பிடித்துக் கொண்டு வருகிறான்.

மழையில் நனையாமல் வருகிறான் அரசன். நள்ளிர வாயிற்றே என்று பாராமல்,புண்பட்ட வீரர்களைக் கண்டு

முகமலர்ச்சியோடு அவர்களைப் பாராட்டுவதற்கு அவன்

கூடாரந்தோறும் போகிறான்.

"கள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரும் வேந்தன்'

என்று வேந்தனைக் கூறுகிறார் புலவர் .

'இவ்வாறு பாசறையில் இருக்கும் மன்னனுடைய போர்த் தொழில் அவனுக்கு வெற்றியைக் கொடுத்து இப்போதே முடியட்டும்! என்று கொற்றவையை வேண்டு வதாக அமைந்திருக்கிறது, நெடுநல்வாடை. -

மலர்களைக் கொண்டு காலம் அறியும் வழக்கம், மாலைக் காலத்தில் மகளிர் விளக்கை ஏற்றித் தெ பவத்தை வழிபடுதல், அரசருக்கு ஏற்ப அளவிட்டு அரண்மனை கட்டுதல், சுவர்களில் கொடிகளைப் போன்ற சித்திரம் வரைதல், தந்தத்தால் கட்டில்,அமைத்தல், மெழுகுச் சீலை யில் ஒவியங்களை எழுதுதல் முதலிய பல செய்திகள் இப் பாட்டின் இடையிடையே வருகின்றன. -

கூதிர் காலத்தில் நகரில் காணும் காட்சிகளாகிய ஓவிய மும், அரண்மனைக்குள் அரசியின் நிலையாகிய சித்திரமும் அரசன் பரிவுடன் பாசறையில் உலவும் படமும் நெடுநல் வாடையைப் படிப்பவர்களின் அகக் கண்ணில் நன்றாகப் பதியும். நாமே வாடைக் காற்றின் குளிரை அநுபவிப் போம். பாண்டியன் மனைவியின் அவலத்தில் பங்கு கொள் வோம். தன் படை வீரர்களிடம் கொண்ட பேரன்பினால்