பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குறிஞ்சிப் பாட்டு 63氮、

செவிலிக்குத் தோழி கூறும் கூற்றாக அமைந்தது குறிஞ்சிப் பாட்டு: இதற்குப் பெருங் குறிஞ்சி என்ற பெயரும் உண்டு. --

"தாயே, நீ வாழ்வாயாக! நான் சொல்வதை, விரும்பிக் கேள்' என்று தோழி தொடங்குகிறாள்.

அன்னாய், வாழி வேண்டு அன்னை'

"நீ இவளுடைய துயரத்தைப் பார்த்து இதற்குக் காரணம் என்ன வென்று குறி சொல்வாரைக் கேட்டும், கடவுளை வாழ்த்தியும், வழிபட்டும் ஒன்றும் அறியாமல் , நீயும் வருந்துகிறாய். முத்து, மணி, பொன் ஆகிய வற்றால் அமைந்த அணிகலன் கெட்டால் செப்பஞ் செய்து கொள்ளலாம். ஆனால் ஒழுக்கமும் குணமும் கெட்டுவிட்டால் அவற்றைப் பொருத்துவது எளிதன்று. ஆகவே, அந்த நிலை வராமல் இதைச் சொல்ல வருகிறேன். நம் தந்தையின் காவலைக் கடந்து சென்று தனியே நாம் அமைத்துக் கொண்ட மணம் இது. இதை அறியச் செய்தால் பழி உண்டா? முறைப்படி இது நிறை வேறாவிட்டால் மறுமையிலாவது நமக்கு இது இயை யட்டும் என்று உன் மகள் சொல்லி வருந்தி எனக்கு உண்மையைச் சொன்னாள். இரண்டு பெரிய மன்னர் களுக்கிடையே நின்று சமாதானம் செய்துவைக்கும் சான்றோரைப் போல நான் இருக்கிறேன்' என்றல் முன்னுரையுடன் தோழி இந்தக் காதற் கதையைச் சொல்லப் புகுகிறாள். - . . .

'தினைப்புனத்துக்குச் சென்று கிளி முதலிய பறவை களை ஒட்டிக் காவல் புரிந்து பகல் போனவுடன் வாருங்கள்' என்று தாய் சொன்னாள். அதன்படியே அந்த இளம் பெண்ணும் அவள் தோழியும் சென்று: