பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ் நூல் அறிமுகம்

சோழ நாட்டில் காடாகிய இடங்களை அழித்து நாடாக்கிக் குளங்களை வெட்டி வளம் பெருக்கினான், உறையூர் என்னும் நகரத்தை விரிவு படுத்தினான். பழங் குடிகளை அங்கே நிறுவினான். மதில்களையும் பெரிய வாயில்களையும் அமைத்தான். -

இவ்வாறு சோழன் கரிகாற் பெருவளத்தானுடைய வீரச்செயல்களையும் நாடு காத்தற் செயலையும் விரித் துரைத்து நிறைவுறுத்துகிறார் புலவர்.

பழங் காலத்தில் தமிழ் நாட்டுக்கும் வெளிநாடு களுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்ததையும், காவிரிப் பூம்பட்டினம் பெரிய துறைமுகமாக இருந்ததையும், கரிகாலன் உறையூரை உள் நாட்டு நகரமாக விரிவுபடுத்தி யதையும், அக்கால மாந்தர்களின் பழக்க வழக்கங்களை யும் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவியாக இருக்கிறது.