பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் நூல் அறிமுகம்

மைாகிலம் சேவடி ஆகத் துாகீர்

வளைகரல் பெளவம் உடுக்கை ஆக விசும்புணெய் ஆகத் திசைகை ஆகப் பசுங்கதிர் மதிபமொடு சுடர்கண் ஆக, இயன்ற எல்லாம் பயின்றுஅகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப, திதற விளங்கிய திகிரி யோனே.”

- (வளை நரல் பெளவம்-சங்கு முழங்கும் கடல். சுடர்சூரியன். என்ப-என்று சொல்லுவார்கள். திகிரியோன். சக்கரபாணி.1 -

ஆண்டவனுக்குத் தமிழில் கடவுள் என்ற பெயர் அமைந்திருக்கிறது, அது அவனுடைய இரண்டு இயல்பு களைக் குறிக்கும். அவன் எல்லாப் பொருளையும் கடந்து நிற்கிறான்; என்றாலும் எல்லாப் பொருள்களின் உள்ளும் இருக்கிறான். கட, உள் என்ற இரண்டு சொற்களும் இணைந்தது கடவுள் என்ற சொல். நற்றிணையின் கடவுள் வாழ்த்து, கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள் உரைப்பதுபோல அமைந்திருக்கிறது. அவன் இயன்ற எல்லாப் பொருளினூடும் பயின்று, சர்வாந்தர்யாமியாய் இருக்கிறான்; அவனே எல்லாவற்றையும் தன் ஆகத்தில் அட்க்கியும் இருக்கிறான். பயின்றதனால் உள்ளிருப்பது தெரியும்; அடக்கியதால் கடந்து நிற்பது தெரியும்.

இயன்ற எல்லாம் பயின்று அகத்திஅடக்கிய என்ற அடி இதனைப் புலப்படுத்துகிறது. -

நற்றிணையின் முதல் பாட்டு, காதலின் சிறப்பைச் சொல்லுகிறது. காதலி தன் காதஏனுக்கும் தனக்கும் உள்ள உறவாகிய காதலைப் பற்றிச் சொல்லுகிறாள், காதல் என்பது ஒரு பண்பு. அது நுட்பமானது.