பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் நூல் அறிமுகம்

உயர்ந்த இடத்தில் மணம் நிரம்பிய சந்தன மரத்தில் இருக்கிறது. அந்தத் தேனைப் போன்றது அவர்களுடைய காதல்.

"தாமரைத் தண்தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீந்தேன்போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை.'

(மீமிசை-மிகமிக மேலே. சாந்தில்-சந்தன மரத்தில். தொடுத்த-அடைவைத்த புரைய-உயர்ந்தன. புரை யோர்-உயர்ந்தோர். கேண்மை-நட்பு: இங்கே காதல்.)

மனமும் இனிமையும் தூய்மையும் உயர்வும் உள்ள பொருள்களை இணைத்துக் காதலின் சிறப்பைக் காட்டி விட்டார் கவிஞர்.

இப்படியே காதலின் சிறப்பையும், காதல் நாடகத்தின் பல வேறு காட்சிகளையும் இந்த நூலில் காணலாம். . -

வேறு ஒரு பாட்டு: பொருளை ஈட்டுவதற்காகக் காதலன் தன் காதலியைப் பிரிந்து வேற்றுாருக்கு வந்திருக்கிறான். இன்னும் பொருளை முற்றும் ஈட்ட வில்லை. அதற்கள் அவனுடைய உள்ளத்துக்கும் அறிவுக்கும் ஒரு போராட்டம் நடக்கிறது. உணர்ச்சி வசப்பட்ட உள்ளம் சொல்கிறது: 'வா, போகலாம். பிரித்வுத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம். முதுகில் தொங்கும் நீண்ட கரிய கூந்தலையும், தாமரை மலர் போல விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளாய் நம் மனத்தைக் கவர்ந்த காதலியிடம் போகலாம்; வா." என்று சொல்கிறது. அறிவோ நீதியுபதேசம் செய் கிறது. ஏன் அவசரப் படுகிறாய்? சிறிது காலம் பொறு. எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்க வேண்டாமோ? நடுவிலே புறப்பட்டு விட்டால் அது முட்டாள்தனம்"