பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 187

தப்பிலாது எனக்குத் தொண்டைச் சால்புடன் இயற்று வோர்கள் ஒப்பிலார் அறுவர் உள்ளார் ;

உவந்(து) என(து) உள்ளத்(து) என்றும் இப்பெரு ஞானம் எல்லாம்

இவர் தந்தார்; இவர்கள் நற்பேர்; எப்படி? எப்போ (து) ? எங்கே?

யார் ? ஏன் ? என் ? என்ப வாகும். .

என்று கூறியுள்ளார். என்ன ? ஏன் ? எப்பொழுது ? எப்படி? எங்கே? யார் ? என்ற அறுவகை விளுக்களும் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் துணையாக இருப்பதைப் பட்டறிவால் அறியலாம். ஈண்டு நன்னூலார் கூறும் அறுவகை விைைவ ஒப்பிட்டுப் பார்த்தலும் இன்றியமையாதது.

விளுக்களின் பயன் : விளுக்களின் பயனேக்குறித்து இவ்வளவுதான் என்று வரையறை செய்து கூற இயலாது. ஒரு சில குறிப்புக்கள் மட்டிலுந்தான் ஈண்டு தரப்பெறுகின்றன. பள்ளிகளில் மாளுக்கர்களின் முன்னறிவைச்

  • I keep six honest serving men;

They taught me all I know ; Their names are What and Why and When And How and Where and Who.

. -Rudyard Kipling

இதன் இன்னுெரு மொழி பெயர்ப்பு : - - .

எப்பொருளும் என்னெஞ்சம் ஏற்க உணர்த்தியவர் இப்புவியில் தொண்டர் இருமூவர்-எப்பொழுது யார் எங்கே ஏன் என்ன எப்படி என்கின்ற பேர்கொண்டார் அன்ன வரைப் பேணு. * அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை

ஏவல் தரும்வினு ஆறும் இழுக்கார்.

-நன்னூல்-நூற். 385