பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி £2 19

சரியாக மதிப்பிடும் ஆற்றலைப் பெறமுடியாது என்று கல்வி நிபுணர்கள் கருதுகின்றனர். தொடக்க நிலையில் இத்தகைய வியப்பூட்டும் கதைகளில் மனத்தைப் பறிகொடுத்தவர்களே பிற்காலத்தில் உயர்ந்த பல இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல்களைப் பெறுகின்றனர் என்பதைப் பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு காட்டுகின்றது. சங்க இலக்கியங் களையும் கம்பன் போன்ற இலக்கிய மேதைகளின் படைப்புக்களேயும் படித்து உணராத தமிழர்களின் வாழ்க்கை வறண்ட தன்மை யுடையது ; அதுபோலவே மோகினிக் கதைகளின் தன்மையை உணராத குழந்தையின் வாழ்வு வறண்ட நிலையையுடையது. நாட்டுக் கதைகளிலும் மோகினிக் கதைகளி லும் காணப்படும் விறுவிறுப்பு, இன்பப்பெருக்கு, கபடமற்ற தன்மை, இலக்கியச் சுவை ஆகிய பண்புகள் பிற்காலத்தில் அமையவேண்டிய இலக்கிய வாழ்விற்கு அடிப்படையாக உள்ளன. எனவே, இக் கதைகளே ஒருவித கட்டுப்பாடின்றிப் பயன் படுத்தலாம்.

வரலாற்றுக் கதைகள் : இவை நம் மூதாதையரின் வாழ்க்கையைப் பற்றியவை. ஒரு சிறந்த வரலாற்றுக்கதை பண்டைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து வடிவம் அமைக்கின்றது. அந்தந்த நாட்டுக் கதைகளைப் பொறுத்தமட்டிலும் இது முற்றிலும் உண்மையாகும். ஒரு நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்ப்பதற்கு இக் கதைகள் பெருந்துணை புரிகின்றன. ஒவ்வொரு நாட்டு வரலாற்றிலும் தலைசிறந்த பல பெரியார்கள் இருந்திருக்கின்றனர். அவர்களிடம் பக்தி கொள்வது இளஞ்சிருர்களின் இயல்பாகும். செயற்கருஞ் செயல்களைப் புரிந்தவர்கள், முடிவான தீர்மானம் உள்ள: வர்கள், பொறுமையையே அணிகலனுகக் கொண்டவர்கள் ஆகியோர் உலக வரலாற்றில் பலர் காணப்படுகின்றனர். அவர்களின் செயல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையாகும். தமிழ் நாட்டிலிருந்த சங்ககால வள்ளல்கள், புரவ. லர்கள், பெரும்புலவர்கள் ஆகியோரின் வரலாறுகள் இளம் உள்ளங்களைக் கொள்ளே கொள்பவை. பண்டைய வாழ்வை.