பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 தமிழ் பயிற்றும் முறை

முன் கேட்டனவற்றைத் தாறுமாருக உளறுவர் ; இந்தச் செயல்களே ஆசிரியர் பயனுறும் வழிகளில் திருப்பிவிட வேண்டும்.

வளர்த்தவர்கள் படித்தலிளுல் பயன் பெறுவதைக் கண்டு குழந்தைகளும் படிப்பதில் விருப்பங் காட்டுவர். தமது நண்பர்கள் படிப்பதைக்கண்டு தாமும் அவ்வாறு படிக்கவேண்டும் என்று ஆசைப்படுவர். படங்களின்கீழ் எழுதப்பெற்றிருப்பதைத் தெரிந்து கொண்டால் அப்படங்கள் எவற்றை உணர்த்துகின்றன என்று அறியலாம் என்பதைக் குழந்தைகள் அறியும்பொழுது அவர்களும் அச் சொற்களேத் தெரிந்துகொள்ள விரும்புவர். தாம் கேட்கும் கதைகள் புத்தகத்திலுள்ளவை என்பதை அறிந்தால், அப் புத்தகத்தைப் படிக்க ஆவல் தூண்டப் பெறுவர். பொது இடங்களில் வைக்கப்பெறும் விளம்பரங்களாலும் அறிவிப்புக்களாலும் உள்ள பயன்களே அறியும்பொழுது தாமும் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள அவாக்கொள்ளுவர். எனவே, அச்சிட்ட சொற்களே அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேவையை அவர்களே உணர்ந்து கொண்டால்தான் படிப்பதில் இயல்பாக ஆர்வம் எழும். சொல்வதைக் கவனத்துடன் கேட்க இயலாத குழந்தைகளிடமும், கேட்கும் ஒருசில சொற்களேத் திரும்பக்கூற இயலாத குழந்தைகளிடமும் அச்செழுத்து உணர்த் தும் பொருளே உணரும் ஆற்றல் வளர இடம் இல்லை.

3. படிப்பில் ஊக்குவித்தல்

குழந்தைகளாயினும் இளைஞர்களாயினும், அவர்களிடம் படிப்பில் ஊக்கத்தை ஊட்டிவிட்டால் கற்றல் எளிதில் நடைபெறும் என்பது பட்டறிவில் காணும் உண்மை. தொடக்கநிலைப் பள்ளிகளில் முதன் முதலாகப் படிப்பைத் தொடங்கும்பொழுது அதை ஒரு விளையாட்டாகக் கருதும் முறையில் தொடங்க வேண்டும். படிப்பதால் பெறக்கூடிய இன்பத்தையும் குழந்தைகளே உணரச் செய்வதால்