பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E98 தமிழ் பயிற்றும் முறை

என்றும், குறைந்த கால அளவு நிறுத்துபவர்கள் விரை வாகப் படிப்போர் என்றும் கருதப்பெறுவர். நாம் படித்துக் கொண்டே ஒரு வரியின் இறுதியை அடைந்ததும் கண்கள் மிக எளிதாகத் தொடர்ந்து பின்புறமாக நகர்ந்து அடுத்த வரி தொடங்கும் இடத்திற்குப் பாய்கின்றன. இதைப் * பின்பாய்ச்சல்” (Return sweep) என்று வழங்குவர். இது நேர்மையாகவும் விரைவாகவும் செல்வதற்குப் பழக்கம் வேண்டும். அச்சு வரியோடு இஃது ஒடிப் பின்பு சரியாக அடுத்த வரிக்குப் போகவேண்டும். இதில் காலக் கழிவு ஏற்பட்டால் வேகம் தடைப்படும்.

நாம் படிக்கும்பொழுது ஒவ்வொரு எழுத்தையும் தனித் தனியாகப் படிப்பதில்லை ; ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் ஒன்று அல்லது இரண்டு சொற்களைப் படிக்கின்ருேம். ஒரு நிறுத்தத்தால் கண் பார்க்கக்கூடிய சொற்களின் நீளத்தை நினைவுகூர் சாண்’ (Recognition span} அல்லது கண்சாண்’(Eyespan)என்று வழங்குவர். கண்சான் அகன்றிருந்தால் வேகம் அதிகரிக்கும். கண்சாணின் அகலம் அதிகமானுல் கண் நிறுத்தங்களின் எண்ணிக்கை குறையும். அகலமான கண்சாணில்ை ஒரே தடவையில் அதிகச் சொற்களைப் படித்துப் பொருளுணரலாம். சிலசமயம் கண்கள் சில இடங்களில் சரியாகப் பார்த்துக் கருத்துணர்ந்து படிக்காமற் போய்விட்டுப் பின்னர் அவ்விடங்களுக்கே திரும்பி வருவதுண்டு. கண்கள் பார்த்தவற்றையே திரும்பப் பார்க்கின்றன: காரணம், முன்னர்க் கருத்துணராமற் பார்த்தன ; அதை உணர்வதற்காக மீண்டும் பார்க்கின்றன. இவ்வாறு கண்கள் பின்நோக்கி வருவதைப் பிற்போக்கு (Regression) என்று கூறுவர். பிற்போக்குகள் குறையக் குறையப் படிப்பின் விரைவு பெருகும். எனவே, அகன்ற கண்சாண், ஒரு வரியில் குறைந்த எண்ணிக்கையுள்ள நிறுத்தங்கள், குறைந்த பிற்போக்குகள் இருந்தால் அதை நல்ல படிப்பு என்று சொல்லலாம் ; இவ்வாறு இருந்தால் படிப்பு விரைந்து செல்லக்கூடியதாகவும் இருக்கும்.