பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 4 g

புலப்படும். கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்களே நாம் எத்தனே முறை படித்தாலும் அவற்றிடம் நம்முடைய ஆர்வம்குன்றுவதில்லை. அறிவைத்தொடவல்ல நூல்கள் சிறந்த இலக்கியங்களாகா : ஒருமுறை படித்து அவற்றிலுள்ள பொருள்களே அறிந்து கொண்டால் மீண்டும் நாம் அவற்றைப் படிக்க விரும்புவதில்லை. ஆனல், உணர்ச்சி நிலையைப் பற்றும் நூல்கள் அங்ங்ண மன்று ; எத்தனே முறை படித்தாலும் சலிப்புத் தராதவை. அனுமனது ஆற்றலும், இலக்குவனது தொண் டும், ப்ரதனுடைய சகோதர வாஞ்சையும், குகனது நட்பும், சீதையின் கற்பும், கும்பகருணனுடைய செய்ந்நன்றியறிதலும் நம் மனத்தை விட்டு என்றும் நீங்காதிருப்பவை. இத்தகைய உயர்ந்த பண்புகளைப் பெற்றிருப்பவைதாம் கால வெள். ளத்தில் அழியாது என்றும் நிலத்து நிற்பவை. அவற்றைப் படிக்குந்தோறும் இன்பத்தைப் பெறலாம்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு'. '

என்ற வள்ளுவர் வாய்மொழியே சிறந்த இலக்கிய உரையாணி. ஒருநூல் பயிலுந்தோறும் நயம் பயவாதாயின் அது சிறந்த நூலன்று என்று உறுதியாகக் கூறிவிடலாம்.

ஒருமுறை படித்த மாத்திரத்தில் இன்பந்தரும் புத்தகங்களும், எத்தனே தடவை படித்தாலும் விளங்காதவைகளும் உள்ளன. அவை இலக்கியங்களாகா. ஒரு முறை படித்த மாத்திரத்திலே பொருள் புலப்படாது, நுணுகி ஆராய ஆராய, நுனியிற் கரும்பு தின்றற்றே" என்பதுபோல வரவரச் சுவை பயக்கும் நூல்களே இலக்கியங்கள். தொடங்கின நாள் தொட்டு ஆயுட்காலம் வரையிலும் படித். தாலும் வெறுப்பில்லாமல் சுவை பயப்பவை இலக்கியங்களில் உயர்தரமானவை.

குறள்-788.

த-29