பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/478

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 455

யாது பயன் ? அன்றியும், சொல்லின் பொருளே அறியும் முறையும் தவறு. சந்தர்ப்பத்தை விட்டு நீக்கினுல் சொற் பொருள் சரியாக விளங்கவும் செய்யாது.

இம்முறையில் கவிதையைக் கற்பிப்பது தவறு. கவிதையை இசையூட்டி அழுத்தம் திருத்தமாகப் பல முறை படிப்பதாலேயே அதிலுள்ள கடின சொற்களின் பொருளே மாணுக்கர்கள் ஊகித்துக் கொள்ளல் கூடும். இவ்வாறு உணர்ந்தால்தான் அவர்கள் சொற்களின் சரியானபொருளே, சிறப்பான பொருளே, சந்தர்ப்பத்திற்கேற்றவாறு புதிதாக உணர்த்தும் பொருளே அறிய முடியும். இவ்வாறு சொற்களின் பொருள்களே அறியாவிட்டால், கவிதையின் உயிரோட்டம் மாணுக்கர்கட்குப் புலனுகாது. எடுத்துக்காட்டாக ஆரும்படிவ மானுக்கர்கட்கு,

மாங்கமழ் பூவையும் மயிலும், தமாலக்காடும்

வண் கிளியும், நீலவெற்பும் மடமான் கன்றும், இணங்குகட லுந்துகிரும், காரும் மின்னும்,

யமுனையெனும் திருநதியும் எகினப் பேடும், கணங்குழைய கோசலைதே வகிய சோதை

கண்மணியும் பாவையும்போல் கமல வீட்டின் அணங்கரசி யுடன் குலவி ஆடீர் ஊசல் :

அலங்கார மாயவரே ஆடீர் ஊசல்!! ?

என்ற பாடலக் கற்பிக்கும்பொழுது முதலில் பாடலை இசை

யாகப் பாடினுலேயே அதன் பொதுப் பொருளே ஒருவாறு

உணரக் கூடும் ; இரண்டு மூன்று தடவை இசையுடன்

படித்தால் பாடலின் பொதுப்பொருள் விளங்காமற்போகாது.

பிறகு பாடப் படிக்கும்போது,

மணங்கமழ் பூவையும் மயிலும்’ தமாலக்காடும் வண்கிளியும்’ 'நீலவெற்பும் மடமான் கன்றும்’

இணங்குகடலும் துகிரும்

  • அழகர் கலம்பகம்-செய்-45