பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியம் 475。

என்பதை நூல்களாலும் அனுபவத்தாலும் நுணுகியறிந்தவர். இத்தகைய உயர்ந்ததொரு பண்பில்ை இவர் முடியுடை வேந்தர்களேயும் புகழ்ந்து பாடவில்லை; குறுநில மன்னர்களை யும் வியந்து போற்றவில்லை; வள்ளல்களையும் மகிழ்ந்து பாராட்டவில்லை. இதனைக்கண்ட அக்காலச் சான்ருேர்களுள் சிலர் அவரிடம் சென்று ஒருவரையும் அவர் பாடாததற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று வினவினர். அதற்கு அவர் கூறிய விடையே மேற்கூறிய பாட்டாக வடிவெடுத்தது.

ஆசிரியர் பாடலை முதலில் இன்னுேசையுடன் சொற்களேப் பிரிக்காமலேயே சீர்பிரித்துப் பலமுறை படிக்கவேண்டும். நல்ல முறையில் கவிதை கற்பிப்பதைக் கவனித்துப் பயிற்சி பெற்ற மாணுக்கர்கள்தாம் “இத்தகைய பாடல்களே அறியமுடியும்; உணர்ந்து சுவைக்க முடியும். இவ்வாறு படித்துக் காட்டுதல் போதுமென்று ஆசிரியருக்குத் தோன்றும்வரை படித்துக் காட்டலாம். படிக்கும்பொழுதே சில அருஞ் சொற்களுக்குப் பொருளும் கூறலாம். மாளுக்கர்களின் முகமலர்ச்சியே இதற்கு அளவு கருவி. பாடலைப் படித்து முடித்த பிறகு பாடலில் கூறப்பெற்றுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கூறும்படி தூண்டலாம்-வினுக்களின் மூலமாக.

கவிஞர் மிகவும் பரந்த நோக்குடையவர் என்பது எதளுல் அறியக்கிடக்கின்றது ? “ ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கையை யுடையவராதலால்’’. எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப்படும் இக்காலத்தில் கட்டாயம் இதைப் பலர் சொல்லக்கூடும். பலர் மேடைப் பேச்சுக்களில் இவ்வரியை அடிக்கடிக் கையாளுகின்றனர். ஒருவருக்கு நன்மையும் தீமையும் எப்படி வருவதாகக் கவிஞர் கூறுகின்ருர் ? நன்மையும் தீமையும் பிறர்தருவதால் வருவதில்லை; முன்நியதிப்படி வருகின்றன. நோய் எப்படி வருகின்றது ? எப்படித் தீர்கின்றது ? அதுவும் அப்படித்தான்; தானுக வருகின்றது; தானுகவே தணிகின்றது.”

இறப்பைக் குறித்து கவிஞர் என்ன தெரிவிக்கின்றர் ?