பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 497

இலக்கணப் பாடத்தைப் பள்ளிகளில் மாணுக்கர்கள் கற்பது இன்றியமையாததாகும்.

இலக்கணம் பயிற்றுவதில் கருத்து வேற்றுமைகள் : மொழிப் படிப்பின் இன்றியமையாத இலக்கணப் பாடத்தை மாளுக்கர்கட்குக் கற்பிப்பதில் முறைவல்லாரிடம் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இங்கு நிலவும் கருத்து வேற்றுமைகள் போல் அதிகமாக வேறு எப் பகுதியிலும் இல்லையெனக் கூறலாம். இவ்வாறு நிலவும் கருத்து வேறீறுமைகளே மூன்று பகுதிகளில் அடக்கலாம். ஒருசாரார், பள்ளிகளில் இலக்கணமே கற்பிக்கக்கூடாது என்று கூறுகின்றனர். மக்கள் பிழையறப் பேசுவதைக் கேட்பதாலும், நல்ல நூல்களைக் கற்பதாலும் மாளுக்கர்கள் மொழித் திறன்களை அடையக்கூடும் என்பது இவர்களின் கருத்தாகும். மற்ருெரு சாரார், இலக்கணத்தின் பல பகுதிகளையும் அவற்றின் விதிகளையும் தனிப் பாட்மாகப் பாடம் கேட்டு உணர்ந்தாலன்றி நல்ல இலக்கண அறிவு வாய்க்கப்பெருது என்றும், இலக்கண அறிவின்றி உயர்ந்த இலக்கியங்களே நல்ல முறையில் சுவைக்க முடியாதென்றும் கூறி, இலக்கணம் மாணுக்கர்க்கு மிகவும் இன்றியமையாதது என்றும், ஆகவே அதைத் தனிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர். பிறிதொரு சாரார், இலக்கணம் மொழியைத் திருத்தமுறப் பேசவும் எழுதவும் துணைபுரியும் கருவியாதலின் அதை நடை முறைக்கு வேண்டிய அளவில் ஒரு சில விதிகளே இலக்கியப் பாடங்களுடன் சேர்த்து அறிந்தால் போதுமென்றும், இலக்கண விதிகளைத் தனியாகப் படித்து நெட்டுருச் செய்யவேண்டியதில்லை யென்றும் தென்காசி வழக்காகத்’ தீர்ப்புக் கூறுகின்றனர். இம்முறைதான் இன்று பெரும்பாலான கல்வியறிஞர்களால் சரியான முறையென ஒப்புக் கொள்ளப் பெற்றுள்ளது.

தொடக்கநிலைப் பள்ளிகளில் இலக்கணம் : இலக்கணமே வேண்டாம் என்று கூறுவது தொடக்கநிலைப் பள்ளிகளைப் பொறுத்த மட்டிலும் ஓரளவு உண்மையாக இருக்கலாம்.

த-33