பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 515

அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிறமொழிச் சொற்கவளின்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர் தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாகும். ஆகவே, தமிழ் துாய் மொழியுமாகும். எனவே, தமிழ் மொழி செம்மொழி என்பது திண்ணம். இதுபற்றியே தொன்று தொட்டு தமிழ்மொழி செந்தமிழ்’ என்று நல்லிசைப் புலவர்களால் ஒதப்பெற்றுள்ளது.

ஒரு மொழி திரிந்து வேறுபடுவதெல்லாம் தன்னியல் பாகவே ஏற்படுவதாகும். எவரும் தாம் பேசும் மொழியைத் தம் விருப்பப்படி மாற்ற இயலாது. மக்களறிவின் றியே மொழி வளர்ந்து முதிர்ந்து கொண்டு செல்லும். பல்லாண்டு. கள் கழிந்த பின்னரே முதிர்ச்சிக் குறிகள் தோன்றும். இவற்றை யறிந்து இலக்கண நூலாரும் தம் நூலில் இதற்கு இடம் வைத்துச் செல்வர். நன்னூலார்,

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி ளுனே.”

என்று குறிப்பிடுவர். தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பே தமிழ் மொழியிற் பிற மொழிச் சொற்கள் புகுந்துள்ளன. இவற்றைத் திசைச் சொல், வடசொல் என்று பிரித்துக்காட்டி அவற்றிற்கு நூற்பாக்களும் அவர் செய்துள்ளார்." நன்னூலிலும் இவற்றிற்கு நூற்பாக்கள் உள்ளன .

வட சொல்லையும் திசைச் சொல்லில் அடக்கிவிடலாம். அங்ங்னம் அடக்காது தனியாகக் கூறுவதற்குக் காரணம் என்ன என்பதை ஆராயும் பொழுது ஒர் உண்மை புலப்படுகின்றது. தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே வடமொழி பேச்சு வழக்கற்றுப் போயிருக்கக் கூடும். எனவே, பேச்சு வழக்கற்ற மொழியிலிருந்து வந்த சொற்களைப் பேச்சு வழக்குள்ள மொழிச் சொற்களிலிருந்து பிரித்தறிவதற்குத் திசைச்சொல், வடசொல் எனத் தனித்தனியாக விதந்

நூற். 462. தொல்-சொல். நூற். 400, 4.01, 402. 19 நூற். 273, 374.