பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணம் 52基

கற் கந்திரு நாடுயர் வாழ்வுற சித்தர் விஞ்சையர் மாகர் சபாசென கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற-விடும் வேலா

என்று சலாம் சபாசு என்ற இரு சொற்களையும் அருணகிரிநாதர் தமது திருப்புகழ் என்ற நூலில் எடுத்தாண்டிருப்பதையும் காண்க. .

ஒரு மொழி ஆதிக்கம் அடைந்து வரும்பொழுது பெரும்பாலான மக்கள் அதைப் பயில்வர். புது மொழியின் மீதுள்ள ஆர்வங் காரணமாகவும், அதனைப் பேசவும் எழுதவும் வேண்டும் என்ற அவாவின் காரணமாகவும் பல சொற்களைத் தம் மொழியில் கலந்து பேசுவர். ஆங்கிலம் இன்னும் அரசாங்க மொழியாக இருத்தலால் ஆங்கிலச் சொற்கள் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கலந்து வருகின்றன. இன்று இந்தி பொது மொழியாக வரவேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதால் பெரும்பாலான மக்கள் இந்தி பயிலத் தொடங்கியிருக்கின்றனர். இதனுல் பல இந்தி மொழிச் சொற்கள் தமிழ் மொழியில் வந்து ஏறத்தான் செய்யும். இன்று நகர்ப்புறங்களில் "காலை உணவு ஆயிற்ரு ?’ என்று ஒருவர் தமது நண்பரை வினவு வதற்குப் பதிலாக மார்னிங் சோட்டா ஹஸ்ரி ஆயிற்ரு? என்று வினவுவதை நாம் காண்கின்ருேம். தமிழில் பேசும் நண்பர் தமிழில் வினவும்பொழுது இரண்டு பிறமொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதை அறிகின்ருேம். இம்மாதிரிதான் ஏனைய இந்திய மொழிகளிலும் இந்திச் சொற்கள் கலந்து கொண்டிருக்கும்

சமயம் : சமயங்கள் ஒரு நாட்டில் செல்வாக்கு அடையும்பொழுது சமயக் கருத்துக்களைப் பேராவலுடன் மக்கள் கற்பது இயல்பு அப்பொழுது அச்சமயக் கருத்துக்களே உணர்த்தும் புதிய மொழிச் சொற்கள் அந்நாட்டில் தொன்றுதொட்டு வழங்கும் மொழிகளுடன் கலக்கும். சமயப்பற்று மிக்கிருக்கும் மக்களிடையே அச்சமயத்தை உணர்த்தும் புது மொழியிடமும் அதிகப்பற்று ஏற்பட்டு