பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0. தமிழ் பயிற்றும் முறை

நன்கு நிறைவேற்ற முடியாது. அடிக்கடி ரகர-றகர வேறுபாடுள்ள சொற்கள், லகர-ளகர-ழகர வேறுபாடுள்ள சொற்கள், ணகர-னகர-நகர வேறுபாடுள்ள சொற்கள். போன்ற வற்றைக் கரும்பலகையில் எழுதிக்காட்டி குல், மாணுக்கர் களின் எழுத்துப் பிழைகள் குறையும். கட்புலப் பயிற்சியினு லன்றி வேறு முறைகளினுல் எழுத்துப் பிழைகளைக் குறைக்க முடியாது.

தாய்மொழியாசிரியர்கள் விளுக்களின் இன்றியமை யாமையை நன்கு உணர்தல் அவசியம் ; கல்வி பயிற்றலில் வினுக்களின்றி நல்லவெற்றியைக் காணமுடியாது. பாடத்தைத் தொடங்குவதற்குமுன் தேர்ந்தெடுத்துள்ள சில விளுக்களை விடுத்து மாணுக்கர்களின் முன்னறிவைச் சோதித்தல் வேண்டும் ; முன்னறிவை அறியாது பாடத்தைத் தொடங்கிப் பயனில்லை. பாட வளர்ச்சியின்பொழுது அடிக்கடி விளுக்களே விடுத்து விடையளிக்கச் சொன் குல்தான் மாணுக்கர்கள் ஆசிரியரைப் பின்பற்றுவது தெரியும் ; பாடத்தைப் புரிந்துகொள்ளுகின்றனரா என்பதை அறியவம் முடியும். பாடத்தை முடித்த பின்னரும் விளுக்களே விடுத்தால்தான் பாடத்தில் எவ்வளவு கற்றுக்கொண்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள இயலும். அன்றியும், விளுக்களே அடிக்கடிக் கையாண்டால்தான் மாணுக்கர் தம் கருத்தைத் தெளிவாக உணர்த்தலில் நல்ல பயிற்சியைப் பெறவும் முடியும் கவனக் குறைவுடனிருப்பவர்களே க் கவனிக்கச் செய்யவும், தூங்கும் சிலரை விழிப்புடனிருக்கச் செய்யவும் இவ்வினுக்கள் பெருந்துணை புரியும்.

நல்ல முறையில் விளுக்கள் விடுத்தல் எளிதன்று. நல்ல பட்டறிவுள்ள ஆசிரியர்கள்தாம் அவற்றை நன்கு கையாள முடியும். நல்ல விளுக்கள் நல்ல சிந்தனையினின்றுதான் தோன்ற முடியும். நல்ல சொற்களால் தெளிவான முறையில் விளுக்களே உருவாக்கிச் சிறந்த முறையில் கையாளவேண்டும். மாணுக்கர்களிடம் வினுக்களே விடுக்கும்பொழுது அவற்றை அடிக்கடி மாற்றியமைத்தால் அவர்களிடம் மயக்க உணர்ச்சியை உண்டாக்கும் ;