பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியரின் வேலைத் திட்டங்கள் 579

இன்றைய தமிழாசிரியர்களிடம் தலைகாட்டல் கூடாது ; எல்லாவற்றையும் ஒரளவு அறிந்து கொண்டு அவற்றிலெல்லாம் பங்கு கொள்ள வேண்டும்.

பாடவேளைப் பட்டி பள்ளி வேலையின் பெருவிசை (Main spring) என்று சொல்லவேண்டும். அஃதின்றேல் பள்ளி வேலைகளை ஒழுங்காகச் செய்ய இயலாது. பள்ளிப் பாட வேளேப் பட்டி ஒவ்வொரு ஆசிரியருக்கும் கொடுக்கப் பட்டுள்ள காலம், ஒவ்வொரு பாடமும் எவ்வாறு பகுக்கப்பட்டு அவ்வேள்ைகளில் ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர்-என்பனபோன்றவற்றைக் காட்டும் சாதன மாகும். சாதாரணமாக இன்று நடைமுறையில் ஒரு வாரத்தில் கல்வி பயிற்றுவதற்குரிய காலத்தை 45 மணித்துளிகள் உள்ள 35 பாட வேளைகளாகப் பிரித்துக் கொண்டுள்ளனர். சனி ஞாயிறு தவிர, ஏனைய ஐந்து நாட்களில் நாளொன்றுக்கு ஏழு பாடவேளேகளைக் கொண்டு பள்ளிகள்”தம் கல்வி கற்பித் தலையும் பிற செயல்களேயும் செய்து வருவதைக் காணலாம்,

மாற்றியமைக்கப் பெற்றுள்ள உயர்நிலைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழியாகிய முதன் மொழிப் பயிற்றலில் பொதுப்பகுதி, சிறப்புப்பகுதி என இரண்டு பகுதிகள் உள. ஒரு வாரத்திலுள்ள 35 பாட வேளைகளில் ஏழு வேளைகள் தாய்மொழிப் போதனைக்குத் தரப்பெற்றுள்ளன. தமிழ் முதல் மொழி நிலையினே அடைந்த பிறகும், பயிற்றுமொழியாக வந்த பிறகும் இம் மொழிப் போதனைக்கு அதிகப் பாடவேளைகள் தேவைதான் என்பதை யுணர்ந்து காலப் பிரிவினையை மாற்றி யமைத்துள்ளனர். இப்படி அதிகமாகக் கிடைத்துள்ள நேரத்தை மொழியாசிரியர்கள் எங்ங்னம் பயனடையும் வகையில் செலவிட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்துத் தம் வேலைத்திட்டத்தை மாற்றி யமைத்துக் கொள்ளவேண்டும். கொடுக்கப் பெற்றுள்ள ஏழு பாடவேளைகளில் நான்கினேப் பொதுப் பகுதித் தமிழ் கற்பித்தலுக்கும், மூன்றினைச் சிறப்புப் பகுதித் தமிழ் கற்பித்தலுக்கும்

  • Re-organised Secondary Education scheme.