பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு-2 : திட்டங்களும் பயிற்று முறைகளும்

கல்வித் திட்டம் என்பது, தொடக்க நிலை, உயர் நிலே, கல்லூரி நிலப் படிப்புக்களில் கற்க வேண்டிய பாடங்களைப் பற்றிக் கூறும் ஒரு திட்டம். பாடத் திட்டம் என்பது, அத் திட்டத்தில் உள்ள் பாடப் பொருள் ஒன்றில் அமைய வேண்டிய பாட விவரங்களைக் குறிப்பது. முன்னது கல்வித் துறைகளேக் குறிக்கின்றது ; பின்னது அத்தகைய துறைகள் ஒவ்வொன்றிலுமுள்ள பாடங்கள்பற்றிய விவரங்களைத் தெரி விக்கின்றது. தாய்மொழி யாசிரியர்கள் கல்வித் திட்டம், மொழிப்பாடத் திட்டங்கள்பற்றிய விவரங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களைக் கருவிகளாகக் கொண்டு பயிற்றுங்கால் தாய்மொழி யாசிரியர்கள் பயிற்றலின் சில அடிப்படையான விதிகளே அறிந்து கொள்ளவேண்டும். ஊக்குவித்தல், செயல்மூலம், கற்றல், கற்பனவற்றை வாழ்க்கையுடன் இணைத்துக் காட்டல், கற்றலில் அக்கறையை உண்டாக்கல், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய ஐந்து படிகள் ஆகியவை அவற்றுள் சில. பண்டிருந்து இன்று வரை எத்தனையோ பயிற்று முறைகளை அறிஞர்கள் கண்டுள்ளனர். அவற்றுள் மாணுக்கர்கள் குழுவாக நின்று பயில்வதற்கும் தனித்தனியாக இருந்து பயில்வதற்கும் எனத் தனித்தனி முறைகள் உள்ளன. இம்முறைகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிபுணர்களால் வகுக்கப் பெற்றவை. ஆசிரியர் வகுப்பறையிலிருந்து கற்பிக்கும்பொழுது சில உபாயங்களைக் கையாண்டு கற்பித்தால் பயிற்றுவிக்கப்பெறும் பொருள் மாணுக்கர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியும் ; மாணுக் கர்கட்குக் கற்பதிலும் ஊக்கம்மிகும் ; உற்சாகம் கிளர்ந்