பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 63

இயல்புகளைப்பற்றியாவது அறிந்திருத்தல் அவசியம். ஒரு குறிப்பிட்ட துறையில் திறனை வளர்த்துக்கொள்ளவல்ல ஒருவரிடம் அமைந்துள்ள ஆற்றலைத்தான் நாட்டம் (Aptitude) என்று குறிப்பிடுகின்றனர். ஒரு பொறி நுட்ப நாட்டச் சோதனையைக்கொண்டு ஒருவர் கருவிகளேயும் பிற பொருள்களையும் மேற்கொண்டு செய்யவல்ல ஒருவரது கைவேலைத் திறனே அளந்தறிதல் கூடும். பொதுத் திறனுக்கும் தனித்திறனுக்கும் தொடர்பு இருந்தாலும், அதற்கு விதிவிலக்கும் உள்ளதை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இத்துறையில் விரிவான ஆராய்ச்சிகள் நடத்தி இயல்பாக அமைந்த பொதுத் திறனுடன் திட்டமான மனப் போக்குகளையும் அறிந்துள்ளனர். தனி நாட்டச் சோதனைகளைக் கொண்டு ஆசிரியர்களும் மாணுக்கர்களும் தொழில் துறைகளிலும் கல்வித்துறைகளிலும் ஊக்கவல்ல திட்டடிான மனப் போக்குகளைக் (Definite tendencies) கண்டறியலாழ். இன்று பல துறைகளேயும் ஆராயவல்ல சோதனைகள் ஆயத்தம் செய்யப்பெற்று வெளியிடப்பெற்றுள்ளன. இவை யாவும் முன்னறி சோதனைகளே. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இச் சோதனைகளைக் கையாள்வதற்கு ஆசிரியர்கள் அளவியல் துறையில் அண்மையில் வெளிவந்துள்ள நூல்களைப் படித்தறிய வேண்டும்; அல்லது அத்துறையில் தனிப்பயிற்சியும் அனுபவமும் பெற்றுள்ளவர்களின் துணையை நாடல் வேண்டும்.

(iii) அக்கறையறி சோதனைகள் : இவை மேற்கூறப் பட்ட நாட்டச் சோதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றைக்கொண்டு ஒருவர் எத்தொழிலில் அக்கறை காட்டுகின்ருர் என்பதை யறியலாம். இவற்றை ஆயத்தம் செய்த அறிஞர்கள் அக்கறை (Interest) என்பது குடிவழி வரும் பண்பு என்று கூறவில்லை. அடிப்படையான மனப்போக்குகள் மிக இளமையிலேயே ஒருவரிடம் நி3 பெறுகின்றன என்ற உளவியல் உண்மையின் அடிப்படையில் இச் சோதனைகள் ஆயத்தம் செய்யப்பெறுகின்றன. இப்போக்குகள் நடுக் குமரப்பருவத்தில் அல்லது பின்-குமரப் பருவத்தில் மிக அழுத்தமாகப் படிந்து விடுகின்றன.