பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 635

அறிஞர்கள் புதிய வகைகளைக் கண்டுகொண்டே வருகின்றனர். எனவே, இவ்வகைகளின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டே வருகின்றது. ஆயினும், ஏழு அல்லது எட்டுவகைச் சோதனைகளே நடைமுறையில் பயன்பட்டு வருகின்றன. எல்லா வகைகளைப்பற்றியும் ஈண்டு கூறுவதற்கு இடம் இல்லை. அவற்றை அளவியலே விளக்கும் அறிஞர்களின் நூல்களில் கண்டுகொள்க. ஒருசில வகைகள் மட்டிலும் ஈண்டு தரப்பெறுகின்றன.

1. சரி.தவறு சோதனைகள் : சில குறித்த தொட்ர் மொழிகளைக் கொடுத்து அவற்றுள் வரும் கருத்துக்கள் சரியா, தவரு என்பதற்கேற்ப காக்கைப் புள்ளியையோ சுழியையோ இடும்படி கூறுதல். இவற்றையே வினவாக அமைத்து ஆம் இல்லே தெரியாது ' என்ற விடைகளில் ஒன்றை எழுதுமாறும் ஏவலாம்.

(எ-டு)-1.

அடியிற் காணும் சொற்களில் சிலவற்றில் எழுத்துப் பிழைகள் உள்ளன. சரியானவற்றிற்கு நேராக “V” என்றும் பிழையானவற்றிற்கு நேராக x’ என்றும் குறிகளே இடுக.

1. எண்ணை 11. கேள்வரகு 2. விள்ாம்பழம் 12. பூஷாரி 3. சிலவு 13. சந்தணம் 4. கோர்த்தான் 14. வைக்கல் 5. எலுமிச்சை 15. ஊருணி 6. நாருயணன் 16. அமாசி 7. கோதும்பை 17. அரங்கேற்றம் 8. முறுகன் 18. வாளைப்பழம் 9. இரும்பு 19. திருச்சிற்றம்பலம்

10. மங்கையர்க்கரசி 20. வியாளன் .

(எ-டு)-2.

1. பொங்கலும் சுண்டலும் தின்ருர்கள். (தொழிலாகு.

பெயர்.)