பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 தமிழ் பயிற்றும் முறை

நோக்கம் சுவை புணர் ஆற்றலை வளர்க்கவேண்டும் என்பதாக இருக்கும்பொழுது, செய்திகள்பற்றிய விவரங் களே அளப்பதாகச் சோதனை அமைந்தால் அச் சோதனை ஏற்புடைமை பெறவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். சுவை யுணர் ஆற்றல் பெறுவதற்குச் செய்திபற்றிய விவரங். களும் தேவைதான்; எனினும், சோதனே கல்வி கற்றலால் பெற்ற மனப்பான்மையைத்தான் முதலில் சோதிக்க வேண்டும். எனவே, ஏற்புடைமை என்பது ஒரு திட்டமான பண்பேயன்றிப் பொதுப் பண்பு அன்று என்பது பெiப்படுகின்றது.

லின்ட்குஸ்டு என்ற அறிஞர் ஒரு சோதனையின் ஏற்புடைமையைக் குறித்து தமது நூலில் இவ்வாறு விளக்குகின் ருர்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் உயர்நிலப் பள்ளி மாளுக்கர்களின் பொது அறிவை ஆராயும் உயர்ந்த ஏற்புடைமையைப் பெற்றுள்ள சோதனையை அதே பாடத்தில் கல்லூரி மானுக்கர்களின் வரலாற்று அறிவை ஆராயும்பெழுேதும், உயர்நிலப் பள்ளி மாணுக்கர்களின் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார வரலாறுபற்றிய அறிவை ஆராயும்பொழுதும், எதிர் காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில நாட்டு வரலாற்றுப் பாடத்தை நுழைத்தால் பெறும் வெற்றியின் அளவை ஆராயும்பொழுதும், ஐக்கிய நாட்டு வரலாறு பற்றிய அறிவின் குறைபாடுகளே ஆராயும்பொழுதும், இறுதியாக அதைக்கொண்டு கைவேலைப் பயிற்சிக் கல்விக்கு மதிப்பெண்கள் தரும்பொழுதும், படிப்படியாக ஏற்புடைமையில் குறைந்து வருவதை எடுத்துக்காட்டுன்ெருர். ஒரு குறிப்பிட்ட நிலையில் பயன்படும்பொழுது காணும் ஒரு சோதனையின் ஏற்புடைமையை அது பிறிதொரு சமயம் பயன்படுத்தும்பொழுது காண்டல் அரிது. அது போலவே, ஒரு குறிப்பிட்ட மானுக்கர் குழுவிற்குப் பயன்படும்பொழுது பெற்றுள்ள ஏற்புடைமையைப் பிறிதொரு

The Construction and Use of Achievement Examinations ué, 21–22.