பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

台52 தமிழ் பயிற்றும் முறை

பண்புகளைக் காணலாம். பெரும்பாலும் தேர்வுகளே ஆயத்தம் செய்தல், அவற்றைத் தக்க முறையில் அச்சிடல் ஆகியவற்றில்தான் சங்கடங்கள் நேரிடுகின்றன. தெளிவான குறிப்புக்கள், நல்லதாள், தெளிவான அச்சு, தாளின் அளவு, பயன்படுத்தும் அச்செழுத்துக்கள் ஆகியவை சோதனே. களே க் கையாளும் எளிமையை அளவு படுத்தக்கூடும்.

6. திருத்துவது : சோதனைகள் அவற்றின் முக்கியத். துவத்திற் கேற்றவாறு எளிதாகவும் விரைவாகவும் சாதாரண முறையிலும் திருத்தக் கூடியனவாக இருத்தல்வேண்டும். சோதனைகளின் பொருளறியாதவர்களும் எழுத்தாளர் பணியிலுள்ளவர்களும் (Clerical workers) அவற்றைச் சரியான முறையில் திருத்தக்கூடியவையாக அமைதல்வேண்டும். எளிதாகத் திருத்துவதற்கு இன்று பல முறைகளைக் கண்டறிந்துள்ளனர். அவை தரமாக்கிய சோதனைகளைக் கையாளுங்கான் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயத்தம் செய்யப்பட்ட விடைகளைக் கையால் திருத்துவதற்கேற்றவாறு அமைத்தல், பொறியால் திருத்துவதற் கேற்றவாறு அமைத்தல் ஆகியவை அவற்றுள் ஒருசில.

7. ஒப்பிடத் தகும் பண்பு (Comparability) : சோதனே. களின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் முக்கியமானது. சோதனைகள் ஒப்பிடத்தகும் கூறுகளேப் பெற்றிராவிட்டால், அவற்ருல் பெறும் முக்கிய பலன்களே இழத்தல் கூடும். தரமாக்கிய சோதனைகளில் இவ்வொப்பிடத்தகும் பண்பு இரண்டு முறைகளில் நிலைநிறுத்தப்படுகின்றது. அவை : () சோதனைகளின் இரட்டைப்படி கிடைத்தல்; (ii) தேவையான பொதுநிலை அளவைகள் கிடைத்தல். தரப்படுத்திய சோதனைகள்பற்றிய கையேடுகளில் (Manual) வயது, வகுப்புநில முதலியவற்றிற் கேற்றவாறு பயன் படுத்தும் முறையில் தேவையான பொதுநிலை அளவைகள்கொண்ட அட்டவணைகள் அடங்கியிருத்தல் வேண்டும். இத்தகைய பொதுநிலை அளவைகளைக்கொண்டு தனிப்பட்ட மாணுக்கரின் நிலையினையும், வகுப்புக்களின் நிலையினையும், அதே வயதுடைய மாணுக்கர்களின் சராசரி