பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தமிழ் பயிற்றும் முறை

நாட்டின் பல பகுதிகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள இசைந்து நிற்கவேண்டும். கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடங்களை வாழ்க்கையுடன் பொருத்திக் காட்டவேண்டும்; பள்ளி, குழந்தைகளே வாழ்க்கைக்குத் தயாராக்குகின்றது என்பதைச் சமூகமும் உணரும்படி செய்தல்வேண்டும். கான்காவது : கல்வித்திட்டம் மாணுக்கர்களே வேலைக்கு ஆயத்தம் செய்வதுடன் ஒய்வு நேரத்தையும் எவ்வாறு பயனுள்ள முறையில் கழிப்பது என்பதை உணர்த்தக்கூடிய தாக அமையின் நன்று. எனவே, பள்ளியில் சமூக இயலைக் காட்டும் நாடக நிகழ்ச்சிகள், முருகுணர்ச்சியை வளர்க்கும் இசை நிகழ்ச்சிகள், உடல்வன்மையைப் பெருக்கும் விளையாட்டு நிகழ்ச்ச்சிகள் முதலியவை அடிக்கடி ஏற்படுத்தப்படல் வேண்டும். இவை மாணுக்கர் வாழ்க்கை .யினேச் சுவையுள்ளதாக ஆக்குவதுடன் பிற்காலத்தில் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள முறையில் கழிக்க விருப்பச் செயல்கள், பிற துறைக்கவர்ச்சிகள், ஆகியவற்றை ஒவ்வொருவரிடமும் வளர்க்கவும் செய்யும். ஐந்தாவது கல்வித் திட்டத்தில் அடங்கியுள்ள பகுதிகள் ஒன்றுக்கொன்று பொருந்தாத தனித்தனிப் பாடங்களாக அமைந்து கல்வியின் நோக்கத்தையே கெடுத்துவிடக் கூடாது. ஒவ்வொரு பாடமும் பிற பாடங்களுடன் நன்கு இணைந்து நிற்க வேண்டும் ; ஒவ்வொரு பாடத்திலுமுள்ள பல பகுதிகளும் ஒன்ருேடொன்று பொருந்துவனவாக அமைதல் வேண்டும். பாடங்கள் யாவும் குறுகிய முறையில் ஏதோ செய்திகளைத் தருவன போலின்றி வாழ்க்கையுடன் இணைந்து நின்ருல் சாலப் பயன் தரும்.

தொடக்க நிலைப் பள்ளியின் கல்வித் திட்டம் : இன்று நம் நாட்டில் பள்ளிகள் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளாகப் பிரிக்கப் பெற்றிருக்கின்றன. தொடக்கநிலைப் பள்ளிக்குக் குழந்தைகள் வருவதற்குமுன் அவர்களே ப் பள்ளிப் படிப்புக்கு ஆயத்தம் செய்யும் பள்ளிகள் (Preparatory schools) [5th Britiq-âb &Sãrgoth offéth தோன்றவில்லை. நகரங்களில் ஒன்றிரண்டு இடங்களில்தான்