பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்திட்டமும் மொழிப்பாடத்திட்டமும் 47

சொன்னுல் அது தவருகாது, புகைவண்டிக் கூலியாள், ஊர்க்காவலர், அஞ்சல் சேவகர், புகைவண்டி யோட்டி, பஸ் கண்டக்டக் போன்றவர்களுடன் குழந்தை உரையாடுவதிலும் அவர்கள் கல்வி அமைகின்றது என்றும் சொல்லலாம். சிறு குழந்தைகட்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இவற்றை யெல்லாம் ஓர் ஒழுங்கில் அமைத்து ஒரு கல்வித் திட்டத்தை வகுக்கவேண்டும். இன்று நடைமுறையிலுள்ள கல்வித் திட்டம் ஒரளவு இத்துறையில் கவனம் பெற்றிருக் கின்றது. அத்திட்டத்தில் முதல் ஐந்து வகுப்புக்கள் வரையிலும் (1) தாய் மொழி, (2) எண் கணக்கு, {3) இயற்கைப் பொருள் பாடமும் தோட்டவேலேயம், (4) உடற்பயிற்சி, (5) ஆட்சி முறை உட்பட நாட்டு வரலாறும் நிலவியலும், (6) உடல்நலம் (7) இசை (8) கைத்தொழில்கள் கட்டாய பாடங்களாகவும், (1) ஓவியம், (2) ஆங்கிலம், (3) விபத்தில் முதல் உதவி (4) இஸ்லாமியப் பள்ளிகளிலும் இருமொழி பயிலும் இடங்களிலும் தாய்மொழி அல்லத் மற்ருெரு உள்நாட்டு மொழி, (5) சமயக் கல்வியும் நன்னெறிக் கல்வியும் விருப்பப் பாடங்களாகவும் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தனித் தனியாகக் கற்பிக்காது செய்து கற்றல் முறையில் அனுபவங்களாக உணரச் செய்தல் வேண்டும்.

கவனத்திற்குரிய சில கூறுகள் : உயர்நிலைப் பள்ளிக் கல் வித்திட்டத்தை அமைக்கும் முன்னர் நம் கவனத்திற்குரிய சில கூறுகளே ஆராயவேண்டும். இக்கல்வித் திட்டத்தினை அமைக்கும்பொழுது பல பிரச்சினேகள் எழுகின்றன. மன ஆற்றலில் தனியாள் வேற்றுமைகள் (Individual differences) 1 -ஆண்டில் நன்கு புலனுகின்றன. இவைகளுக்கேற்றவாறு பல்வேறு துறைகளே இங்கு அமைக்கவேண்டும். உளவியலாராய்ச்சியாலும் கற்பித்த அனுபவத்தாலும் மூன்று வகையான மாணுக்கர்களைக் காணலாம். (1) அறிவு நிலைக்கல்வியை விரும்புவோர் : இவர்கள் வேறு நோக்கமின்றிக் கற்றலைக் கற்றலுக்காகவே விரும்புபவர்கள். இவர்கள் காரணகாரிய முறையில் கூறுவன