பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழ் பயிற்றும் முறை

வற்றையும் தொடர்ந்தாற்போல் கூறப்படும் அனுமானத் திற்குரிய செய்திகளையும் எளிதில் உணர்வர். (2) தொழில் துறைக் கல்வியை விரும்புவோர் : இவர்களுடைய கவர்ச்சி களும் ஆற்றல்களும் வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவியல், கலைத் துறைகளில் செல்லும். பொறியியல் நுணுக்கங்களில் இவர்கள் அறிவுத்திறன் நன்கு செல்லுமேயன்றி நுட்பமான மொழித் துறையில் செல்லாது. (3) பயனில் நாட்ட முள்ளவர்: நுண் கருத்துக்களேவிடப் புலனிடான பொருள்களே இவர்கள் கவனத்தை ஈர்க்கும். இவர்களின் ஆற்றல் கள் யாவும் நடைமுறையில் நன்கு பயன்படத் தக்கவை. உயர்நிலைப் பள்ளிக்கென வகுக்கப்பெறும் கல்வித்திட்டம் இம் மூன்றுவகை மாணுக்கர்களுக்கும் ஏற்றதாக இருத்தல் வேண்டும். மாற்றியமைக்கப்பெற்ற புதிய உயர்நிலைக் கல்வித் திட்டத்தில் (சென்னை) இதற்கு இடம் அளிக்கப் பெற்றுள்ளது. நான்காம் படிவ நிலையில் மூவகைத் துறைகள் வகுக்கப்பெற்றுள்ளன. எல்லாத் துறையிலும் பயிலும் மாணுக்கர்களுக்கு இன்றியிமையாதனவாகவுள்ள உடல், உள, ஒழுக்கத் தொடர்பான செய்திகள் கல்வித் திட்டத்தில் அமைந்திருக்கவேண்டும். எனவே, உயர் நிலைப் பள்ளிக்கென வகுக்கப்பெறும் கல்வித்திட்டம் எல்லோருக்கும் பொதுவான முறையிலும், படிப்படியாக மானுக்கர்களின் சிறப்பான கவர்ச்சிகள், ஆர்வங்கள் ஆகியவற்றிற் கேற்றவாறு புதிய செய்திகளைக் கொண்டும் இருத்தல் வேண்டும்.

தொடக்க நிலைப் பள்ளிகளிலிருந்து மாணுக்கர்களைப் பல கல்வித் துறைகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாற்றுவதில் நடைமுறை ஆட்சியில் பல இடர்ப்பாடுகள் நேரிடுகின்றன. நமது தமிழ் நாட்டிலுள்ள கல்விமுறை அமைப்பில் இரு வழிகள் உள்ளன. ஐந்தாம் வகுப்புப் படிப்பை முடித்துக் கொண்டவர்கள் ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைத் தொடக்கப் பள்ளிகளில் கல்விகற்று அரசினரால் நடத்தப்பெறும் தேர்வினை எழுதித்

3

Academic, Secretarial, Pre-technological and Domestic courses.