பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தமிழ் பயிற்றும் முறை

விளக்குகின்ருர். கற்பித்தலில் ஆசிரியர் கவனிக்க வேண்டிய சில விதிகளே ஈண்டுக் காண்போம்.

1. ஊக்குவித்தல்: ஊக்குவித்தல் என்பது (Mótívation) நவீன கல்வி முறையின் முக்கியமான கூருகும். இன்று நாம் அன்மொழித் தொகையைப் பற்றிப் படிக்கப்போகின்ருேம் ” என்று சொன்னுல் மட்டிலும் போதாது ; ஆசிரியர் சொல் லாமலேயே அவர் கற்பிக்கும்பொழுது மாணுக்கர் அதை அறிந்துகொள்ளமுடியும். ஆனல், உளவியற் கொள்கைப்படி கற்பிக்கவேண்டிய பொருள் குழந்தைகளின் அக்கறை யுடன் பொருந்த வேண்டும். குழந்தைகள் தம்முடைய இயல்பூக்கங்களுடன் தொடர்புள்ள பொருள்களில் கட்டாயம் அக்கறை காட்டுவர். சொற்களே எழுத்துக் கூட்டிப் படிக்கும்படி குழந்தைகட்குக் கற்பித்தலில் சுவை இல்லை ; குழந்தைகளும் அதை விரும்பார். மின்னட்டை கள் மூலம் கற்பித்தல், தோட்டத்திலுள்ள செடிகொடிகளில் அவற்றின் பெயர்களே எழுதித் தொங்கவிடுதல் போன்றவற்ருல் அச்சொற்களே அறிந்து கொள்வதில் குழந்தைகளிடம் ஆர்வமும் அக்கறையும் பிறக்கும் ; இதை அனுபவத்தில் காணலாம். தையல் வேலையில் ஒரு பெண் குழந்தைக்கு அக்கறை இல்லாதிருக்கலாம். ஆளுல், தன் பொம்மைக்குப் பாவாடை சட்டை தைத்துப் போட வேண்டிய வாய்ப்பை அளித்தால் அக் குழந்தை வேலையை ஆவலுடன் கற்றுக்கொள்ள முனேயும். இவ்வாறு குழந்தைகளிடம் படிப்பின்பால் ஆர்வத்தை எழுப்புதலேத்தான் முறை வல்லார் ஊக்குவித்தல் ’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஆசிரியர் கூடியவரை எல்லாப் பாடங்களையும் கற்பிக்கும்பொழுது இவ்வாறு ஊக்குவிக்க முயற்சி செய்யவேண்டும். இதைச் செய்தல் எளிதன்று. கற்பிக்கவேண்டிய வற்றைக் கருத்துடன் பயின்றும், பல செய்திகளே நேரில்

  • Adamson J. F. : The Individual and the Environment பக்கம் 26-27,