பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தமிழ் பயிற்றும் முறை

சில சொற்களில் கரும்பலகையில் எழுதிவிடுதல் நலம். சில சமயம் இராமாயணத்தில் ஒரு பாடத்தில் வினுக்களைப் போட்டு மாணுக்கர் மனத்தைத் தயார்செய்து விட்டு, திடீரென்று சிலப்பதிகாரம் என்று வேருெரு பாடத்தலைப்பைக் கரும்பலகையில் எழுதுபவரும் உளர்! இதுவும் தவறு. சிலப்பதிகாரத்தைப்பற்றியே வேறு விதமாகக் கூறி (அல்லது ஒரு சில விளுக்களால் வினவி) சிலப்பதிகாரப் பாடத்திற்கு வரவேண்டும்.

எடுத்துக்கூறல் (Presentation) : இஃது இரண்டாவது படியாகும். இப் படியில் புதிய பொருள்கள் மாணுக்கர் களுக்குக் கற்பிக்கப் பெறுகின்றன. இதை இரண்டு விதமாகக் கற்பிக்கலாம். ஆசிரியரே விரித்துரைத்துக் கற்பிக்கலாம் ; அல்லது விளுக்கள் மூலம் மானுக்கர்களையே கண்டறியவும் செய்யலாம். ஒவ்வொரு பாடத்திலும் இப் படி மாறும். இப் படியில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. யாதெனில், புதிதாகக் கற்பிக்கப் பெறும் பொருள்கள் மாணுக்கர்களின் பழைய அறிவுடன் பொருந்தவைக்கப் பெறவேண்டும் என்பதே. இதைத் தான் ஹெர்பார்ட் வலியுறுத்தினர். கற்பிக்கவேண்டிய பகுதியைப் பல சிறு பகுதி களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் ; அவை ஒன்றை யொன்று காரணகாரிய முறையால் தொடர்ந்து வருமாறு: அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு சிறு பகுதியி லும் கவனத்தைச் செலுத்திக் கற்பிக்கவேண்டும் ; ஆற் ருெழுக்காகப் பாடம் செல்லவேண்டும். ஒரு பகுதி முடிந்து அடுத்த பகுதிக்குச் செல்லும்போது அரிமா நோக்கு” வேண்டும். சென்ற சிறு பகுதியும் புதிய சிறு பகுதியும் இணையவேண்டும் ; இணைவதை மாணுக்கர் மனம் அறியவேண்டும். இம்மாதிரியே பாடம் முழுவதையும் இணைத்து இணைத்துக் கற்பிக்கவேண்டும். ஒரு சமயம் மாணுக்கரின் கவனம் குறிப்பிட்ட பொருள்களில் செல்லும் ;

  • அரிமாநோக்கு-சிங்கம் நடந்து செல்லும்போது கம்பீரமாக முன்னும் பின்னும் பார்த்து நடக்கும் இயல் புடையது.