பக்கம்:தமிழ் மணம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 தமிழ் மணம் வெள்ளையலைகளை வீசி இன்பக் கூத்தாடுகின்றாள். கடல் கடந்த தமிழரின் வழிவந்தும் எனக்குக் கடல் கடக்கும் துணிவு இல்லை! கடலருகே உட்கார்ந்துவிடுகின்றேன். கதிரவன் கரகரவென்று எழுகின்றான்; உலகினைத் தன் அழகிய நிறமெலாம் பூசி ஒளிரச் செய்கின்றான். திரும்பிப் பார்க்கின்றேன். மங்கிக் கிடந்த சென்னை நகரம் பொங்கிப் பொலிகிறது. ஒருபுறம் பழம்பாலாற்றைச் சேர்ந்த கூவம் கடலொடு கலக்குமிடத்தே புதுப்பாலம் இந்நாளைய சிற்பியின் பெருமையை வளைந்து வளைந்து புகழ்ந்து கிடக்கின்றதே. நேரே செக்கச் சிவந்த கட்டடம் வெள்ளை முடிகளுடன் ஓங்கி விற்றிருக்கின்றது. என்னுடைய கல்வித்தாய் இனிதே அரசாட்சி செய்யும் திருஒலக்க மண்டபம் இதுதான்!- சென்னைப் பல்கலைக் கழகத் திருக்கோயில் இதுதான்! நிலப்பரப்பினைச் சுற்றுமுற்றிலும் பார்ககின்றேன். அளவிலாத பெருவானம்! அளவிலாத பெருங்கல்வி! காலப் பரப்பினையும் அளக்க முயல்கிறது என் மனம். பழைய நினைவுகள் வருகின்றன. கற்ற நினைவும், கேட்ட நினைவும். வாழ்ந்த நினைவும் எல்லாம் சென்னை நகரம் இன்றுபோல என்றும் அறிவாராய்ச்சி நிலையமாகவே இருந்தது எனக் கண்டு என் மனம் இன்பவெள்ளத்தில் துள்ளிக் குதிக்கின் றது. தெற்குமுகமாகத் திரும்புகிறேன். தோமையர் கோயி லின் கோபுரம் எனக்குக் காட்சியளிக்கின்றது. தோமையர் கிறித்தவக் கொள்கையினை அங்கிருந்து பரப்பியதனை முன் னரே கண்டோம்.தோமையர் அறப்பள்ளியைக் கிறித்துவப் பெருமானின் பல்கலைக் கழகம் என்று பாராட்டி வரவேற்கும் நூல் சென்னை மாநகரத்தெழுந்த இந்தத் திருக்குறளன்றி வேறெது?இன்றுள்ள சென்னையின் பொதுநிலைமைக்கேற்ப. அன்றே எவரும் என்றும் எதிர்பாராத முறையில் பொதுமை அறத்தினைத் திருக்குறள் வெளியிட்டது இந்தச் சென்னை மண்ணின் வளம்போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/102&oldid=1481474" இலிருந்து மீள்விக்கப்பட்டது