பக்கம்:தமிழ் மணம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கறியும் சோறும் 11 தலா என்றால் தெலுங்காய்விட்டது. வந்தான் என்பதனை வந்து என்றால் மலையாளம் ஆகிவிட்டது. பால் என்பதனை ஹாலு என்றால் கன்னடமாகிவிட்டது. ஆகவே அவற்றினைக் கற்றுக்கொள்வதில் அருமையே இல்லை. அனைவரும் ஒன் றாகப் புழங்கும்போது பேசப் பழகுவது எளிது. தெலுங்கு, காரம் நிறைந்து நெய் மணக்கும் "கோங்கூரா" (புளிச்ச கீரை)ப் பச்சடியாகும். மலையாளம், தேங்காய்ப் பால் நிறைந்து வாய் மணக்கும் அவியலாகும். கன்னடம், பருப் பும் கற்கண்டும் நிறைந்து பால்மணக்கும் போளியாகும். நம் நாட்டுப் பழைய மொழிகளுக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்தப் பழஞ்சோறு உடலுக்கும் உயிருக்கும் நல்லது. மேனாட்டாரும் அவற்றினை விரும்பிக் கற்கின்றனர். சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி, ஹீப்ரூ -இவை நம் நாட்டில் வாழவந்தோர் பாராட்டும் பழைய மொழிகள். கடவுட் கொள்கையை ஒளிவிடும் விளக்குக்களாக இவை பலருக்குக் காட்சி அளிக்கின்றன. கடவுள் உண்டோ இல்லையோ. கடவுளை நம்புவோர் கண்ணெதிர் தோன்றுகின்றனர். அவர்கள் உள்ளத்தினை அறியவேண்டாமா? எதனையோ எல் லாம் கற்கின்றோம்! மக்கள் கற்பதற்குச் சிறந்த பொருள் மக்களையன்றிப் பிறிது ஒன்று உண்டோ? இந்நாளைய மக்கள் கருத்தினையும் முன்னாளைய மக்கள் எண்ணங்களையும், மனப் போக்கினையும் வளர்ச்சியினையும் இந்தப் பழைய மொழிகள் டாலுஞ் சோறுமாய் ஊட்டுகின்றன; நம்மனைவரையும் நல்ல வழியில் பிணித்து ஒன்றாக்குகின்றன. ஆனால், அடிப் பொருளை மறந்து நிழலுக்காகச் சண்டை இடத் தொடங்கிக் குருட்டுக் கொள்கையாம் பாழ்ங்கிணற்றில் விழாதபடி ஆராய்ச்சிக் கைவிளக்குக் கொண்டுசெல்லவேண்டும். நம் நாட்டுப் பழம்புதையல்களாம் இவற்றை மண்மூடி அழிய விடலாமா? நாம் உரிமை பெறுவது வாழ்விற்கா, அழிவிற்கா? இவற்றின் சாயல் இன்று இந்தியாவில் வழங்கும் தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/11&oldid=1480325" இலிருந்து மீள்விக்கப்பட்டது