பக்கம்:தமிழ் மணம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 தமிழ் மணம் கோயிலாய் வாழ்ந்தினிதே வரக்கூடும். ஊரார் அனைவரும் ஓய்வு காலங்களில் கண்டு களிக்கத் திருவிழாக்கள் நிகழும். அந்தத் திருவிழாக்களில் குறவஞ்சி முதலிய நாடகங்களைக் கண்டு மக்கள் களிப்பார்கள். அன்னாபிஷேகம், பாலாபி ஷேகம் என்பன எல்லாம் திக்கற்றார்ககுச் சோறு கொடுக்க வும் ஏழைப் பிள்ளைகளுக்குப் பால் உதவவும் எழுந்த ஏற்பாடுகளேயாம். இவை எல்லாம் நாம் காண்கின்ற இன்பக் கனவுகள் அல்ல: அந்தக் கோயிற் சுவர்களில் கல்லெழுத்தால் செதுக்கி வைததிருக்கும் பழைய வரலாறுகளேயாம். எனவே, கோயில்கள், வழிபடும் இடமாக மட்டும் விளங்கவில்லை.வழி பாடுதான் உயிர்நிலை. ஆனால், அதனைச் சுற்றிச் சமுதாயத் துறைகள் அத்தனைக்கும் உயிர்நிலையாகக் கோயில்கள் தழைத்தோங்கின. இன்று மேனாட்டில் கிளர்ச்சி ஒன்று வளர்கின்றது. பள்ளிக்கூடங்களைச் சமுதாய வாழ்வின் நடுவிடமாக அமைத்துவர முற்படும் கிளர்ச்சியே அஃது. அத்தகைய கிளர்ச்சியின் பயனாகவே சென்ற காலத்தில் நம் தமிழ்நாட்டில் கோயில்கள் எழுந்தன. இந்தக் கோயில், எதிர் காலத்தில் எவ்வாறு திருந்தவேண்டும் என்பதனை இந்தப் பழைய வரலாறே நமக்கு விளக்கிவைக்கவில்லையா? இந்தப் படமாடும் கோயில்கள் எல்லாம் நடமாடும் கோயில்களாம் மக்களுக்கென்றே எழுந்தன. இந்த உணமை யைப் பிறர் மறக்கும்போதெல்லாம் அறிஞர்கள் வற்புறுத்தி வந்துள்ளார்கள். இதனை இந்தத் தமிழ்நாட்டில் புகவிட்டல்ர் யார்? பழைய நாள்களில் கோயில்கள் இருந்தன. அவற் றிற்கு அம்பலங்கள் என்று பெயர். தில்லையில் கூத்தப் பெருமான் ஆடுகிற உள்ளிடம் போல இருப்பதே அம்புலம். அப்படித்தான் மலையாள நாட்டில் ஊர்தோறும் கோயில்கள் இருப்பதனைக் காணலாம்: அங்கு மக்களும் தங்கலாம். மக்க ளுக்குப் புகலிடமாவது தமிழ் அம்பலத்தின் சிறப்பியல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/112&oldid=1481486" இலிருந்து மீள்விக்கப்பட்டது