பக்கம்:தமிழ் மணம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 தமிழ் மணம் மொழிகள் பலவற்றிலும் நன்கு விளங்கக் காண்கிறோம். அந்தச் சாயல் வழியே அவற்றைக் கற்பது எளிது. அவற்றால் பல தீமைகள் நம் மொழிக்கு நேர்ந்திருக்க லாம். அந்தத் தீமையை ஒழிக்கவேனும் அவற்றினைக் கற்க வேண்டாமா? உண்மையில் தீமை வந்தது அவற்றால் அன்று; அடிமையில் ஊறிய உள்ளம் அவற்றிற்கும் அடிமையான தாலேயாம். இன்று நாம் வேண்டுவது உரிமையொடு மொழி களை ஆளுவதேயாம். இனித் தமிழன் எவருக்கும் அடிமை இல்லை; எதற்கும் அடிமை இல்லை; மொழிக்கும் அடிமை இலலை; நாட்டுக்கும் அடிமை இல்லை; கொள்கைக்கும் அடிமை லலை; குறைவிலா நிறைவுக்கு அடிமை. உரிமையே அவ னுடைய உயிர்ப்பு. இத்தனையையும் பிறருக்குக் கேடின்றி னபமாக ஆண்டு நுகர்வதே அவனது உரிமை! அம்மட்டோ? தமிழன் உலகம் முழுதும் செல்லுதல் வேண்டும்; அனைவரும் வரவேற்று மகிழுமாறு வாழ்தல் வேண்டும். தமிழர்கள் சிறந்த அமைச்சர்களாகவும், பெருந் தூதர்களாகவும், பிற நாட்டில் பேரும் புகழும் பெற்று விளங்கும் காலம் வருகிறது; வந்துகொண்டிருக்கிறது; வந்து விட்டது! பிற நாட்டு மொழிகளையும் பிற நாட்டுக் கலைகளை யும் அறியாமல் அங்கெல்லாம் போய்ப் புகழ் பெற்று உயர் வது எப்படி? இவ்வாறு வாழவேண்டி ஏற்பட்டதாலன்றோ மேனாட்டினரிற் பலர் பல மொழிகளையும் கற்றுச் சிறந்து விளங்குகின்றனர்! பிற நாட்டிற் புகழும் பெறுகின்றனர்! பிற நாட்டு நூல்களைத் தம் மொழியில் மொழிபெயர்த்துத் தம் மொழியையும் வளர்க்கின்றனர்! பல மொழிகளும தமிழ்த் தேனில் தோய்ந்தூறிய பலவகைக் கனியமுதுக ளாகித் தமிழ் விருந்திற் சிறக்கும் என்பதில் என்ன தடை? இவ்வாறு உலக மொழிகளை எல்லாம் கற்றறிவது கடவுளால் ஆவதன்றி மக்களால் ஆகுமா? ஆகாது. ஆனால். அனைத்தினையும் அறியும் ஆண்டவனாக மக்கள் மாறவேண்டுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/12&oldid=1480326" இலிருந்து மீள்விக்கப்பட்டது