பக்கம்:தமிழ் மணம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆமையும் முயலும் 15 வரும்போது தமிழ் ஒளியாகும். எனவே. உலகினையே தமி ழாக்கிப் பார்க்கும் உள்ளக் கிளர்ச்சியே தமிழுணர்ச்சி ஆம். - "தமிழில் இல்லாதது என்ன?" என்று பலர் கேட்கின் றனர்; "இல்லாதது இல்லை: பின் என்ன கவலை?' எனத் தூங்கத் தொடங்குகின்றனர். ஒரு கதை நினைவிற்கு வரு கிறது. ஓாயிரம் ஆண்டிற்கு முன்- எகிப்து நாடு-அலக் சாண்டிரியா என்ற நகரம்--உலகத்தில் உள்ள நூல்களை எல்லாம் சேர்த்து வைத்த நூல்நிலையம் - இதனெதிர் ஓர் அரசர் வருகின்றார்; இதனைக் காண்கின்றார்: 'இத்தனை நூலா!" என்று மருள்கின்றார்; நாங்கள் நம்புவது எங்க ளது திருமறை. அதிலிருப்பது மட்டுமே இந்த நூல்களில் இருந்தால் இத்தனை ஏன்? வீணே; அதில் இல்லாதது இங்கு இருந்தால் இத்தனையும் பொய்; பொய்யானாலும் புகைந் தெரியவேண்டும்: வீணானாலும் வெந்தெரியவேண்டும்" என்று எரிகிற கட்சிப் பாட்டுப் பாடுகின்றார். இட்டதே சட்டம். அத்தனை நூலும் எரிகிற காட்சியைத்தான் இன்று மனத்தாலே நாம் பார்க்க முடியும். இப்படித்தான் முடியும். "தமிழில் இல்லாதது என்ன?" என்று கேள்வி கேட்கின்ற மனப்பான்மையும். தமிழில் அடிப்படையான உண்மைகள் உண்டு; நிறைய உண்டு. அந்த உண்மைகள் மாறுவதில்லை. ஆனால்,உலகம் மாறிமாறி வருகிறது. மாறிவரும் உலகத்தொடு மாருத உண்மைகளைப் பொருத்திப் பார்க்கவேண்டும். மாறும் காலத் திற்கேற்ப மாறாத உண்மைகளை விளக்கினால் மட்டுமே மக்க ளுக்கு விளங்கும். "குழந்தையும் கடவுளும் கொண்டாடும் இடத்திலே" என்று, பழமொழியை வாய் பேசுகிறது. அந்த உண்மை உடலில் ஊறியிருக்கிறதா? ஊறிக் கிடந்தால் குழந்தை "குய்யோ முறையோ' எனக் கூவியலறிப் பள்ளிக் கூடம் போகுமா? கொண்டாடும் இடத்திற்குப் போகிறதா? திண்டாடும் இடத்திற்குப் போகிறதா? ஆங்கிலக் குழவிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/15&oldid=1480329" இலிருந்து மீள்விக்கப்பட்டது