பக்கம்:தமிழ் மணம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 தமிழ் மணம் எழுதக்கூடிய அளவில் உள்ள ஆங்கிலக் குறிப்புக்களையே நாடி நிற்கின்றனர். நூல்களைக் கற்கும் மனப்போக்கு இங்கு வளருமா? ஆசிரியர் பேசும் விளக்கத்தினைக் கேட்கும் மனப் பான்மை வளருமா? Notes, Notes என்றே கதறுகின்றனர் மாணவர்கள்; அதனைக் கொடுத்தால்தான் அமைதியாக எழுதிக்கொள்கின்றனர்; பிற எல்லாம் அவர்களுக்கு இனிப்ப தில்லை: Bore, Bore என்று கத்துகின்றனர். ஈதோ அறிவுச் சூழல்? இங்கு எப்படி ஒழுங்குமுறை வளரக்கூடும்? ஒழுங் கின்மையே வளர்கிறது. யார் வளர்ககிறார்கள்? மாணவர் களா? இல்லை; இந்தத் திட்டம் வகுக்கும் நாமே! ஆங்கிலம்,நம் மாணவர்கள் அறியவேண்டும். ஆனால். ஒரு மொழியை அறிவதில் இரண்டு வேறு நிலையுண்டு. ஒன்று அந்த மொழியிலுள்ள நூல்களை விரும்பிக் கற்று அறிந்துகொள்ளும் அளவு கற்பது; மற்றொன்று. அதிலேயே எழுதும் அளவு கற்பது. எனக்கு வடமொழி வரும்; வடமொழி நூல்களை நான் படிக்க முடியும். ஆனால், அதிலே நான் எழுத முடியாது. எழுத முயல்வது வீணேயாம். நம்முடைய மாண வர்களும் ஆங்கில நூல்களைக் கற்றறியக்கூடிய அளவு ஆங் கிலம் அறிந்தால் போதும்; ஆங்கிலம் பேச்சுமொழியாதலின் சிறிதளவு முயனறால் எழுதவும் வரலாம்? மிகமிக முயன்று இரண்டோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவிடலாம். ஆனால், எல்லாவற்றையும் ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று வற்புறுத்துவது பொருளற்ற, பயனற்ற முயற்சியே யாம். கலைச் சொற்களைப்பற்றிய குழப்பமும் நம்மிடையே உலவுகிறது. எல்லாத் துறைகளையும் எண்ணிப்பார்த்தால் நமக்கு வேண்டிய கலைச் சொற்கள் நூறாயிரக் கணக்கில் இருக்கக் காண்கிறோம்! இவற்றையெல்லாம் தமிழில் மொழி பெயர்ப்பதா? மொழிபெயர்த்த பின்தான் தொடங்குவ தென்கும், கடலலை ஓய்ந்தபின் கடலில் குளிப்பதுபோலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/22&oldid=1480337" இலிருந்து மீள்விக்கப்பட்டது