பக்கம்:தமிழ் மணம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சங்கம் எங்கே? 33 யொடு வெளிவருவது அடிமையின் அறிகுறியாகுமே அன்றி உரிமைப் பண்பாட்டினை வளர்க்காது என ஒருசிலர் அஞ்சினர். மக்களுடைய தலைவர்களில் பெரும்பான்மையோர் விடுதலைப் போராட்டத்தில் குதித்திருந்தமையால் இதனைப் பற்றி எண்ண அவர்களுக்கு நேரமில்லாது போயிற்று. உரிமை பெற்ற பின்னர் ஓவியம், இசை முதலியவற்றிற்கு ஒரு குழு அமைத்ததுபோல, இலக்கியத்திற்கும் ஒரு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் எழுந்தன. சென்ற ஆண்டு டில்லியில் பல நாட்டுப் பல மொழியினரும் கூடினர்; பேசினர்: திரும் பினர். முடிவு வெளிவரக் காணோம். வரவுசெலவுத் திட்டத் தில் அரசியலார் இதற்கெனப் பணம் ஒதுக்கிவைக்கக் காணோம். இந்தி மொழி பரவுவதே போதும் என அங்குள்ளார் நினைக்கலாம். வடநாட்டு மொழிகள் வடமொழியாம் சம்ஸ்க்ரு தத்தின் திரிபுகள். தென்நாட்டு மொழிகளில் பல வடமொழி யால் வாழ்ந்தாலும் அவற்றின் அடிப்படை வடமொழியன்று. பச்சைத் தமிழும். அச்சுத் தெலுங்கும், பச்சை மலையாளமும். பழங் கன்னடமும் பசுந்துளுவும் வடமொழியை வெறுக்கா விடினும், வடமொழியின் துணையின்றி வாழ முடியும். இவை எல்லாம் ஒரு தாய்மொழியின் மக்கள். கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத் துதித் தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்.... அழியாதுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே" என்று அறிஞர் சுந்தரம்பிள்ளை தமிழைப் போற்றவில்லையா? ஆதலின், இந்த மொழிகளின் வரலாறு பலபல வகையில் வேறுபட்டாலும் ஒருவகையால் ஒற்றுமை பெற்று விளங்கு கிறது. இன்று தற்காப்புத் தேடி வளர்ந்து ஓங்கவேண்டிய பழைய மொழிகள் இவை. ஆதலின், இந்திய இலக்கியச் சங்கம் தோன்றுவதற்குமுன் அதற்கு வழிகாட்டியாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/33&oldid=1480436" இலிருந்து மீள்விக்கப்பட்டது