பக்கம்:தமிழ் மணம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழுக்கு உழைத்த தாத்தா 37 பண்பாட்டுப் போராட்டமாய் வளர்ந்ததன் நுட்பம் இதுதான். இத்தகைய உரிமைப் போராட்டம் முதலில் சிப்பாய்க் கலக மாய்த் தோன்றினாலும் முடிவில் காந்தியடிகளின் சத்தியாக் கிரகம் என்னும் பண்பாட்டு அன்புப் போராட்டமாகத்தானே விளங்குதல் கூடும்? பண்பாட்டுப் போராட்டம் என்றால் பண்பாட்டினை அறியவேண்டாவா?முன்னே தமிழ்ப் பழநூல்கள் வெள்ளத் தில் வெள்ளமா யோடின; நெருப்பில் பேரொளியாக எரிந் தன மக்களைவிட நெருப்பறியும், நீரறியும் தமிழின் அருமை: தமிழ் எழுதிய ஓலைகளை உண்ட செல்லும், இராம பாணமும் தமிழின் சுவையை அனுபவித்ததுபோலத் தமிழன் அனுபவித்ததில்லை. உரிமை இழந்த நாட்டில் உலகம் போற் றும் நூல்களின் நிலை வேறு என்ன ஆகும்! ஆடிப் பெருக் கென்றால் காவிரிக்கு ஏடுகொண்டு வழிபடவேண்டும். உற் றவர் இறந்தார் என்றால், அவர் ஏடும் உடன்கட்டை ஏற வேண்டும். இப்படி ஒரு வழக்கமும் வந்ததே! உரிமை வேட்கை பிறந்தபோது பழைய நூல்களைத் திரட்ட, அவற்றை அறிய, உலகினுக்கு அவற்றை வெளி யிடப் பெருமுயற்சியும் பிறந்தது. சங்க நூல்கள் இல்லை யானால், தொல்காப்பியம் இல்லையானால் நம் பழமையை எவ்வாறு பேசுவது? பசிபிக் முதல் அத்லாந்திக் வரை. காழகம் முதல் உரோமாபுரி வரை சென்ற தமிழரசின் உரி மையைப் பெருமையாக நாம் எவ்வாறு பேசுவது! சிலப்பதி காரமும் மணிமேகலையும் சிந்தாமணியும் இல்லையானால் தமிழ் மரபின் வளர்ச்சியை எவ்வாறு அறிவது? உலா. கலம்பகம், தூது, பிள்ளைத்தமிழ்,கோவை,மாலை,அந்தாதி. பரணி, குறவஞ்சி முதலியவற்றை அறியாவிடின் பின்னாளைய தமிழின் பல்வேறு போக்கினை எவ்வாறு உள்ளவாறு உணர்வது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/37&oldid=1480443" இலிருந்து மீள்விக்கப்பட்டது