பக்கம்:தமிழ் மணம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை "தமிழ் மணம்" இந்தத் தொகுப்பில் வரும் தலைப்புகளில் ஒன்றில் மணக்கின்றது. அதுவே இந்தத் தொகுப்பிற்குப் பெயரும் ஆயிதிறு. இந்தக் கட்டுரைகள் எப்போதெப்போதோ எழுதி யவை. அதனால் அங்கு வரும் குறிப்புக்களை இக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும். சில ஆந்திர நாடு பிரிவதற்குமுன் எழுதியவை; சில நம் சாகித்திய அகாடமி தோன்றுமுன் எழுதி யவை. அக்காலக் கண்கொண்டு ஓதவேண்டும் என்றே அவற்றை மாற்றவில்லை. செய்வன திருந்தச் செய்யும் வழக்கம் எனக்கு என்றும் கைவரவில்லை. இக் கட்டுரைகள் ஒருசிலர் கட்டாயத்தின் பயனாகவே உருப்பெற்றவை. அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையை இதில் ஒவ்வொரு கட்டுரையிலும் காணலாம். இதனை வெளியிடும் உரிமை எனது மனைவியது. எனவே அதனைத் தடுக்க வழியில்லை. இக் கட்டுரை களைத் திரட்டித் தரும் பழிக்கு உரியவர் என் நண்பர் திரு, இ. அண்ணாமலை (அண்ணாமலைப் பல்கலைக் கழகம்). இதனைத் திருத்த நேரம் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/5&oldid=1480319" இலிருந்து மீள்விக்கப்பட்டது