பக்கம்:தமிழ் மணம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய மொழிகளில் தமிழ் மணம் 58 பிடத்தக்கது. குமரகுருபரர் காசியில் கம்பராமாயணப் பிரசங்கத்தை இந்தியில் செய்யும்போது துளசிதாசர் கேட் டிருந்தார் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால். துளசி தாசர் தம் நூலை இயற்றிய காலம், குமரகுருபரர் வடநாட் டுக்குச் சென்றதற்கு அரைநூற்றாண்டுக்கு முந்தியேயாம் என்பதனை நாம் மனத்திற் கொள்ளுதல் வேண்டும். வடமொழியில் உள்ளன எல்லாம் முதல் என்றும், தமி ழில் உள்ளன எல்லாம் வட டமொழியின் மொழிபெயர்ப்பே என்றும் கூறும் மனப்பான்மை பிற்காலத்தே எழுத்து பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. கைவல்லிய நவநீதம் என்ற தமிழ்நூலைச் சங்குகவி வட மொழியில் மொழிபெயர்த் துள்ளார்; உள்ளிருக்கும் ஆன்மாவைக் குகேசன் என்று நெஞ்சுக் குகையில் உள்ளதனை விளக்குவார்போலத் தமிழ் ஆசிரியர் கூற. அதனை வல்லீசன் என அவ்விடத்திற்கு ஒரு தொடர்புமின்றி மொழிபெயர்ப்பது ஒன்றுமே எது முதல் நூல் என்பதனை விளக்கிவிடும். உபமன்ய பக்த விலாசம் என்பது பெரியபுராணத்தின் மொழிபெயர்ப்பு. இதனுடைய மொழிபெயர்ப்பே பெரிய புராணம் என்று. வாய் கூசாது கூறுவாரும் உண்டு. பெரிய புராணம், மொழிபெயர்ப்பு என்ற வரலாறு இதுவரையும் யாரும் கேளாத ஒன்று. இதனைப்பற்றிப் பிற இடங்களில் எழுதியுள்ளமையால் இங்கு விரித்துக் கூறவேண்டுவது இல்லை. சிவஞானபோதச் சூத்திரங்களும் தமிழிலிருந்தே வட மொழியிற் போயின என்பதனை வடமொழிப் பன்னிரண்டாம் சூத்திரம நன்கு விளக்குகிறது. தமிழில் பன்னிரண்டு சூத்திர மாக விளங்குவது வடமொழியில் பதினொன்றரை ஆகிவிடு கிறது. இவ்வாறே நாலடியார் முதலியவற்றில் உள்ள பல பாடல்களையும் மொழிபெயர்ப்பென்று வாதாடுவார் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/53&oldid=1480455" இலிருந்து மீள்விக்கப்பட்டது