பக்கம்:தமிழ் மணம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 தமிழ் மணம் இடைச்செருகலாக நுழைந்த சில அத்தகையவை ஆகலாம். பதினெண் கீழ்க்கணக்கில் பலவகையான மகன் முறைவகை களைக் கூறுவன அத்தகையனவே. நாலடியாரில் உள்ளவை அத்தகையன அல்ல. அவை மகடூஉ முன்னிலை. ஆடூஉ முன்னிலை முதலியவற்றோடு பொருந்தி வரும் அழகு தமிழ் மரபோடொப்பச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் நுட்பம் முதலியவற்றை நோக்கவேண்டும். இவையே அன்றி வியாச பாரதத்தில் இருந்து பல பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகக் காட்டுவா ரும் உள்ளனர். இங்கே ஒன்று நினைவில் வைத்தல் வேண் டும். மகாபாரதம் ஆயிரக்கணக்கான பாடல்களிலிருந்து இலட்சக்கணக்கான பாடல்களாக வளர்ந்தது தென்னாட்டி லேயே யாகும். ஆகவே. அவ்வாறு வளர்ந்த புது வளர்ச்சி தமிழ்காட்டு வளர்ச்சியே யாகும். அவ்வாறானால். தமிழ்க் கருத்தும் அங்கே புகுந்திருக்க இடமுண்டு என்பதனை மறத்த லாகாது. சங்கரர். திங்நாகர். இராமாநுசர். கிருதகோடி முத லானோர் அந்நாளைய தமிழர் என்பதனையும் மறத்தலாகாது. திருமழிசை ஆழ்வாரே திருமிடாச்சாரியார் என்று வடநூற் பேருரையில் குறிக்கப்படுகிறார் என்று காலஞ்சென்ற குப்புசுவாமி சாஸ்திரியார் அவர்கள் கருதினார்கள். ஆகையி னால், தமிழ்க் கருத்துக்கள் பல பிராகிருதம், பாலி. மொழி முதலியவற்றில் எழுந்த நூல்களில் புகுந்திருத்தல் வேண்டும். இந்தக் கண்கொண்டு இனி ஆராய்ச்சி செய்தல் வேண்டும். வட கண்ணப்பரைச் சிவசகத்த வகரியிலும், திருஞாக சம்பந்தரைச் சௌந்தரிய லகிரியிலும் சங்கரர் குறிக்கின்றார். அவர் திருஞாநசம்பந்தர் பாட்டில் ஈடுபட்டுப் பாடுவதாகத் தெரிவதால் அக் கருத்துக்கள் அவர் பேருரையில் உள் ளனவா என்று ஆராய்தல்வேண்டும். நம்மாழ்வார் பாடலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/54&oldid=1480457" இலிருந்து மீள்விக்கப்பட்டது