பக்கம்:தமிழ் மணம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ்நாட்டில் பௌத்தம் 63 பௌத்தக் காப்பியம் ஒன்றிருந்ததும் இவற்றின் வழியே நாம் அறிந்து இன்புறுகின்றோம். அதனை ஓதும் பேறு நமக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்துகின்றோம். விம்பசாரன் பௌத்தரைப் பாராட்டிய மகத அரசன்; அவனுடைய மகன் அஜாதசத்ரு தன் தந்தையைச் சிறைப்படுத்தினான்: புத்தருடைய உறவினன் ஒருவன் புத்தரைக் கொல்ல அஜாத சத்ரு வழியே சூழ்ச்சி செய்து தோற்றான்: விம்பசாரன் சிறையில் இறந்தபின் அஜாதசத்ரு தனக்குப் பிறந்த மக னிடத்தில் தன்னையும் அறியாமல் பொங்கும் இயற்கை அன்பினைக் கண்டு, தன் தந்தையும் தன்னிடத்தில் இத்தகைய அன்பன்றோ கொண்டிருந்திருத்தல்வேண்டும் எனக் கழி விரக்கம் கொண்டானாம். இத்தகைய பலபல காப்பியச் சுவை ததும்பும் பகுதிகள் இந்தக் காப்பியத்தில் பழந்தமிழர் மனத்தினை உருக்கி இருத்தல்வேண்டும். இலங்கைப் பெளத்தர்களுக்கும் தமிழ்நாட்டுப் பெளத்தர் களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழ்ப் பௌத்தர்கள் பல பெளத்த நூல் களை எழுதிய பெருமையை இலங்கையில் கிடைக்கும் கந்த வம்சம் முதலிய நூல்கள் வழியே அறிகின்றோம். இலங்கை யில் பௌத்த மதத்தினை வளர்த்தவர்கள் சிங்களவரே என் றும். அதனை அழித்தவர்கள் தமிழர்களே என்றும் இன்று பலர் நம்பிவரும் கொள்கைகளை இந்த நூல்களே மறுத்துரை யாடுகின்றன. இலங்கையில் அநுராதபுரத்தில் அபயகிரி விகாரைக்கும் மகாவிகாரைக்கும் கி.பி. நான்காம் நூற் றாண்டில் நடந்த போராட்டம் நம்மை இரத்தக் கண்ணீர்விட் டழச்செய்கின்றது. ஈனயான பௌத்தக் கொள்கையும் வைதுல்ய பெளததக் கொள்கையும் இட்ட போராட்டம் அது. ஒருவர் ஒருவரை வருத்தி நாடு கடததி அரண்மனை சூழ்ச்சி செய்து ஒரு பௌத்தப் பள்ளி மற்றொரு பௌத்தப் பள்ளியை இடித்து மண்ணொடு மண்ணாக்கும் கொடிய காட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/63&oldid=1481072" இலிருந்து மீள்விக்கப்பட்டது