பக்கம்:தமிழ் மணம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 .. தமிழ் மணம் அறிந்ததொன்றே. "இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந் தணன் உமையமர்ந்து உயர்மலை இருந்தனனாக ஐயிரு தலை யின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்ப் புகுத் தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன்" என வருவது காண்க. இப்படியே திரிபுர தகன வரலாறு, "தொடங்கற் கண் தோன்றிய முதியவன் முதலாக, அடங்காதார் மிடல் சாய அமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ் செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயி லும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலிற் சீற ரும் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில் ஏறுபெற் றுதிர் வன" எனப் பாடப்பெற்றுள்ளது. . உபநிடதங்கள் 'உமா சகாயம்' என்று ஆண்டவன் பெருமையைக் கூறுவதோடு, 'நீலகண்டம்' என்ற கருத்தினை யும் வற்புறுத்துகிறது. இதனையும் சங்கப் புலவர் மறப்ப தில்லை. 'மணிமிடற் றண்ணல் என்று வாயாரப் புகழ்கின் றனர். பதினெண் கீழ்க்கணக்குகளும் அவனைப் புகழ்கின்றன. திருமூர்த்திகளில் ஒருவனாகவும். அவர்களில் சிறந்தானாகவும் புலவர் அவனைப் புகழ்கின்றனர். பதினோர் உருத்திரர் களும் சிவனிடத்து எழுந்தவர் என்பதும் அவர்கள் கூறுவது. ஆதிரை முதலவனிற் கிளர்ந்த நாதர் பன்னொருவர்" என் பது பரிபாடல் இவ்வளவும் கூறியமையால் சிந்துநதிக்கரையில் வளர்ந்த சைவம் குமரிககரை வரை பரவியதொன்றே ஆகை யால், சங்க நூல்களிலும் அந்தச் சிறப்போடேயே தோன்று வதனைக் காணலாம். மக்களது அடிப்படைக் கொள்கையாக அவர்கள் பண்பாட்டில் ஊறிவிட்டமையால் மெல்ல மெல்ல அப்போதப்போது வேத முதலானவற்றிலும் புகுந்து வளர்ந் தது இந்தச் சைவம். சங்க நூல்களில் எவ்வளவு தூரம் இன்று அந்தப் பழங்கருத்துக்கள் தோன்றுகின்றன என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_மணம்.pdf/72&oldid=1481446" இலிருந்து மீள்விக்கப்பட்டது